ETV Bharat / sports

இறுதிக் கட்டத்தில் சொதப்பியதே தோல்விக்குக் காரணம் - ஈயான் மோர்கன்!

author img

By

Published : Mar 19, 2021, 6:42 PM IST

இந்தியாவுக்கு எதிரான நான்காவது டி20 போட்டியில் நாங்கள் இறுதிக் கட்டத்தில் சொதப்பியதாலே தோல்வியைத் தழுவினோம் என இங்கிலாந்து அணி கேப்டன் ஈயான் மோர்கன் தெரிவித்துள்ளார்.

4th T20I: Losing 3 wickets in 8 balls set us back, says Eoin Morgan

இந்தியா, இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான நான்காவது டி20 போட்டியில் இந்திய அணி 8 ரன்கள் வித்தியாசத்தில் த்ரில் வெற்றிபெற்று, ஐந்து போட்டிகள் கொண்ட டி20 தொடரை 2-2 என்ற கணக்கில் சமன் செய்துள்ளது.

இப்போட்டி முடிவுக்கு பின் பேசிய இங்கிலாந்து கேப்டன் ஈயான் மோர்கன், "இது நிச்சயமாக மிக நெருக்கமான ஆட்டமாக இருந்தது, இந்தியா மிகவும் சிறப்பாக விளையாடியது. இந்தப் போட்டியின் முடிவானது கடைசி ஓவர் வரை சென்றது. இருப்பினும் எங்களது ஒருசில தவறுகளால் போட்டியில் தோற்றோம். இத்தொடர் மூலம் அணியினர் செய்யும் தவறுகளை எங்களால் முடிந்தவரை தவிர்க்க கற்றுகொள்கிறோம்.

ஏனெனில் ஆட்டத்தின் 16, 17ஆவது ஓவர்களில் நாங்கள் தொடர்ந்து மூன்று விக்கெட்டுகளை இழந்ததே எங்களது தோல்விக்கு மிகப்பெரிய காரணமாக அமைந்தது. மேலும், இறுதிக் கட்டத்தில் செய்த ஒரு சில தவறுகள் எங்களது வெற்றியை முற்றிலுமாக பறித்துவிட்டன" எனத் தெரிவித்தார்.

இந்தியா, இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான டி20 தொடரின் வெற்றியாளரைத் தீர்மானிக்கும் கடைசி போட்டி நாளை (மார்ச் 20) இரவு 7 மணிக்கு நரேந்திர மோடி மைதானத்தில் நடைபெறவுள்ளது.

இதையும் படிங்க: 'தினேஷ் கார்த்திக்கின் அந்த ஆட்டம் இந்தியாவின் சிறப்பான ஆட்டங்களில் ஒன்று'

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.