ஹோபர்ட்: ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இங்கிலாந்து அணி 5 போட்டிகள் கொண்ட ஆஷஸ் தொடரில் விளையாடியது. இந்த தொடரில், ஆஸ்திரேலியா அணி 3-0 என்னும் கணக்கில் தொடர்ந்து முன்னிலை பெற்றது. இந்த நிலையில், இறுதி போட்டியான 5ஆவது டெஸ்ட் நேற்று(ஜன.16) ஹோபர்ட்டில் நடைபெற்றது.
இங்கிலாந்து அணி டாஸ் வென்று, பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி முதல் இன்னிங்சில் ஆஸ்திரேலிய அணி 303 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. இதையடுத்து இங்கிலாந்து அணி தனது முதல் இன்னிங்சில் 188 ரன்கள் எடுத்தது.
இதைத்தொடர்ந்து இரண்டாவது இன்னிங்சில் ஆஸ்திரேலியா அணி 155 ரன்களுக்கு 10 விக்கெட்டுகளையும் இழந்தது. வெற்றிக்கு 271 ரன்கள் இலக்குடன் இங்கிலாந்து அணி ஆட்டத்தை தொடங்கியது. ஆனால் 124 ரன்களுக்கு 10 விக்கெட்டுகளை இழந்தது தோல்வியடைந்தது. இதன்மூலம் 146 ரன்கள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலிய அணி 4-0 என்னும் கணக்கில் தொடரை கைப்பற்றியது.
இதையும் படிங்க: Australia retain the Ashes: இன்னிங்ஸ் வெற்றி; ஆஷஸ் கோப்பையை தக்கவைத்தது ஆஸி.,