கொழும்பு (இலங்கை): ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரில் இந்தியா - இலங்கை அணிகள் மோதும் சூப்பர் 4 சுற்று போட்டி இலங்கையின் கொழும்பு பிரேமதாசா மைதானத்தில் இன்று (செப். 12) நடைபெறுகிறது. இதில் டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. இதனையடுத்து, இந்திய அணி 49.1 ஓவர்கள் முடிவில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 213 ரன்கள் எடுத்து உள்ளது.
-
Innings Break!#TeamIndia post 213 on the board.
— BCCI (@BCCI) September 12, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data="
Over to our bowlers now, second innings coming up shortly! ⌛️
Scorecard ▶️ https://t.co/P0ylBAiETu#AsiaCup2023 | #INDvSL pic.twitter.com/5b08DhVQAD
">Innings Break!#TeamIndia post 213 on the board.
— BCCI (@BCCI) September 12, 2023
Over to our bowlers now, second innings coming up shortly! ⌛️
Scorecard ▶️ https://t.co/P0ylBAiETu#AsiaCup2023 | #INDvSL pic.twitter.com/5b08DhVQADInnings Break!#TeamIndia post 213 on the board.
— BCCI (@BCCI) September 12, 2023
Over to our bowlers now, second innings coming up shortly! ⌛️
Scorecard ▶️ https://t.co/P0ylBAiETu#AsiaCup2023 | #INDvSL pic.twitter.com/5b08DhVQAD
இதில், அணியின் கேப்டன் ரோகித் சர்மா மட்டும் அரைசதம் கடந்து 53 ரன்களில் ஆட்டம் இழந்தார். இதனைத் தொடர்ந்து, விராட் கோலி 3 ரன்கள் மட்டுமே எடுத்த நிலையில் பெவிலியனுக்குத் திரும்பி ரசிகர்களுக்கு அதிர்ச்சி அளித்தார். மேலும் கே எல் ராகுல் மற்றும் இஷான் கிஷான் ஆகியோர் 39, 33 ரன்களில் ஆட்டம் இழந்தனர்.
தொடர்ந்து, மற்ற வீரர்களும் சொற்ப ரன்களில் ஆட்டம் இழக்க, இந்திய அணி போராடி வந்தது. இதனிடையே 47வது ஓவர் முடிவில் 9 விக்கெட்டுகள் இழப்பிற்கு இந்திய அணி 197 ரன்கள் எடுத்து இருந்தது. அப்போது மழை குறுக்கிட்டதால் ஆட்டம் தற்காலிகமாக நிறுத்தப்பட்டது. பின்னர் மழை நின்றவுடன் தொடங்கிய ஆட்டத்தின் 49.1வது ஓவரில் அனைத்து விக்கெட்டுகளையும் இந்திய அணி இழந்தது.
-
Rain 🌧️ stops play in Colombo!
— BCCI (@BCCI) September 12, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data="
Stay Tuned for more updates.
Scorecard ▶️ https://t.co/P0ylBAiETu#TeamIndia | #AsiaCup2023 | #INDvSL pic.twitter.com/dPAFNSjyAR
">Rain 🌧️ stops play in Colombo!
— BCCI (@BCCI) September 12, 2023
Stay Tuned for more updates.
Scorecard ▶️ https://t.co/P0ylBAiETu#TeamIndia | #AsiaCup2023 | #INDvSL pic.twitter.com/dPAFNSjyARRain 🌧️ stops play in Colombo!
— BCCI (@BCCI) September 12, 2023
Stay Tuned for more updates.
Scorecard ▶️ https://t.co/P0ylBAiETu#TeamIndia | #AsiaCup2023 | #INDvSL pic.twitter.com/dPAFNSjyAR
அதேநேரம், இலங்கை அணியின் துனித் வெல்லாலகி 5 விக்கெட்டுகளையும், சாரித் அசலங்கா 4 விக்கெட்டுகளையும் மற்றும் மஹீஷ் தீக்சனா 1 விக்கெட்டையும் கைப்பற்றி உள்ளனர். மேலும், இந்தப் போட்டியின்போது ரோகித் சர்மா 23 ரன்களை சேர்த்தபோது, ஒருநாள் போட்டிகளில் 10,000 ரன்களைக் குவித்த 6வது இந்திய வீரர் என்ற பெருமையை பெற்று உள்ளார்.
முன்னதாக, இந்த வரிசையில் முன்னதாக சச்சின் டெண்டுல்கர் 18,426 ரன்களுடன் முதலிடத்திலும், விராட் கோலி 13,024 ரன்களுடன் இரண்டாவது இடத்திலும் உள்ளனர். அவர்களைத் தொடர்ந்து சவுரவ் கங்குலி 11,363 ரன்களிலும், ராகுல் டிராவிட் 10,889 ரன்களிலும், தோனி 10,773 ரன்களிலும் அடுத்தடுத்த இடங்களில் உள்ளனர்.
இந்திய அணி பிளேயிங் 11: ரோகித் சர்மாவை கேப்டனானக் கொண்டு களம் இறங்கி உள்ள இந்திய அணியில் கே.எல்.ராகுல் (விக்கெட் கீப்பர்), சுப்மன் கில், விராட் கோலி, இஷான் கிஷான், ஹார்திக் பாண்டியா, ரவீந்திர ஜடேஜா, அக்ஸர் படேல், ஜஸ்பிரிட் பும்ரா, குல்தீப் யாதவ் மற்றும் முகம்மது ஷமி ஆகியோர் விளையாடுகின்றனர்.
இலங்கை அணி பிளேயிங் 11: தஷுன் ஷனகாவை கேப்டனாகக் கொண்டு களமாடும் இலங்கை அணியில் குசல் மெண்டீஸ் (விக்கெட் கீப்பர்). பதும் நிஷாங்கா, திமுத் கருணாரத்னே, சதீரா சமர விக்ரமா, சாரித் அசலங்கா, தனஞ்செய டி சில்வா, துனித் வெல்லாலகி, மஹீஷ் தீக்சனா, கசும் ரஜிதா, மதீஷா பதிரானா ஆகிய வீரர்கள் விளையாடுகின்றனர்.
இதையும் படிங்க: Ind Vs SL Asia Cup 2023 : இந்தியாவின் வேகத்தை தாங்குமா இலங்கை... வருணபகவானும் வழிவிட வேண்டும்?