ETV Bharat / sports

Asia Cup 2023: வெற்றியுடன் ஆசிய கோப்பையை தொடங்கிய பாகிஸ்தான்! - Shaheen Afridi

ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரின் முதல் ஒருநாள் போட்டியில் நேபாளம் அணியை 238 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி பாகிஸ்தான் அணி அபார வெற்றி பெற்றது.

நேபாள் vs பாகிஸ்தான்
Pakistan vs Nepal
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Aug 31, 2023, 7:27 AM IST

Updated : Aug 31, 2023, 7:35 AM IST

கராச்சி: 16வது ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர் இலங்கை மற்றும் பாகிஸ்தானில் நடைபெற்று வருகிறது. இதன் முதல் ஒருநாள் போட்டி நேற்று (ஆகஸ்ட் 30) பாகிஸ்தான் முல்தான் மைதானத்தில் நடைபெற்றது. இந்த போட்டியில் உலக தரவரிசையில் 15வது இடத்தில் இருக்கும் நேபாளம் அணி முதல் இடத்தில் உள்ள பாகிஸ்தான் அணியை எதிர்கொண்டது.

டாஸ் வென்ற பாகிஸ்தான் அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. ஃபகார் சமான் 3 பவுண்டரிகள் அடித்து 14 ரன், இமாம்-உல்-ஹக் 5 ரன்களிலும் வெளியேறினர். ஒன் டவுனில் களம் இறங்கிய பாபர் அசாம் மற்றும் நான்காவது பேட்டராக வந்த முகமது ரிஸ்வான் நிலைத்து நின்று அணிக்கு ரன்களை சேர்த்தனர்.

23.4 ஓவர்களில் அணியின் ஸ்கோர் 111 ரன்களாக இருந்த நிலையில், ரிஸ்வான் 44 ரன்களுக்கு ரன்-அவுட் ஆனார். தொடர்ந்து ஆகா சல்மான் 5 ரன்களில் ஆட்டமிழக்க, அதன் பின் வந்த இப்திகார் அகமது - கேப்டன் பாபர் அசாமுடன் ஜோடி சேர்ந்து சிறப்பாக விளையாடினார். இருவரும் பந்தை நாளா பக்கமும் சிதறடித்தனர்.

இப்திகார் அகமது 43 பந்துகளில் அரைசதம் அடித்தார். தொடர்ந்து சிறப்பாக விளையாடிய கேப்டன் பாபர் 109 பந்துகளில் சதம் அடித்தார். இது ஒருநாள் போட்டிகளில் அவரது 19வது சதம் ஆகும். இவர்களது பார்ட்னர்ஷிப் 214 ரன்கள் எட்டிய நிலையில், கடைசி ஓவரில் பாபர் அசாம் 14 பவுண்டரிகள், 4 சிக்சர்களுடன் 151 ரன்களுக்கு அவுட் ஆனார். ஒருநாள் கிரிக்கெட்டில் அதிவேகமாக 19 சதம் விளாசிய வீரர் மற்றும் 150 ரன்களுக்கு மேல் விளாசிய முதல் கேப்டன் என்ற சிறப்பை பாபர் அசாம் பெற்றார்.

இதையும் படிங்க: 2024 பாரிஸ் ஒலிம்பிக்கில் நீரஜ் தங்கம் வெல்வார்...பயிற்சியாளர் காசிநாத் நாயக்!

50 ஓவர்கள் முடிவில் பாகிஸ்தான் அணி 6 விக்கெட்கள் இழப்பிற்கு 342 ரன்களை எடுத்தது. இப்திகார் அகமது 11 பவுண்டரிகள், 4 சிக்சர்கள் உள்பட 109 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார். நேபாளம் அணி சார்பில் சோம்பால் கமி 2 விக்கெட்களும், கரண் கே.சி மற்றும் லாமிச்சானே தலா 1 விக்கெட்டும் எடுத்தனர்.

அதனை தொடர்ந்து, 343 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இமாலய இலக்கை நோக்கி களம் இறங்கிய நேபாளம் அணி அடுத்தடுத்து விக்கெட்களை பறிகொடுத்தது. 23.4 ஓவர்களில் 104 ரன்கள் மட்டுமே எடுத்து ஆல் அவுட் ஆனது. அதிகபட்சமாக ஆரிப் ஷேக் 5 பவுண்டரிகளுடன் 26 ரன்களும், சோம்பால் கமி 4 பவுண்டரிகளுடன் 28 ரன்கள் எடுத்தனர்.

பாகிஸ்தான் அணி தரப்பில் ஷதாப் கான் 4 விக்கெட்கள் எடுத்து அசத்தினார். ஷஹீன் அப்ரிடி, ஹரிஸ் ரவூப் தலா 2 விக்கெட்களும், முகமது நவாஸ் மற்றும் நசீம் ஷா தலா 1 விக்கெட்டும் சாய்த்தனர். இதன் மூலம் பாகிஸ்தான் அணி 238 ரன்கள் வித்தியாசத்தில் நேபாளம் அணியை வீழ்த்தி அபார வெற்றி பெற்றது.

இந்த ஆட்டத்தில் பாபர் அசாம் - இப்திகார் அகமது ஜோடி 214 ரன்கள் சேர்த்ததே ஒரு நாள் கிரிக்கெட்டில் பாகிஸ்தானின் 5வது விக்கெட் பார்ட்னர்ஷிப்பில் அதிகமாகும். முன்னதாக யூனிஸ் கான் - உமர் அக்மல் 176 ரன்கள் சேர்த்ததே அதிகபட்சமாக இருந்தது. அதே போல் நேபாளம் பவுலர் சோம்பால் கமி பாகிஸ்தான் அணிக்கு எதிராக பந்துவீசிய போது 85 ரன்கள் கொடுத்ததே ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளில் ஒரு நேபாள பவுலரின் அதிகபட்சமாகும். இதற்கு முன்பு அவரே 81 ரன்கள் கொடுத்தது அதிகபட்சமாக இருந்தது.

ஆசிய கோப்பையின் இரண்டாவது ஒருநாள் போட்டியில் இலங்கை அணி வங்கதேச அணியுடன் மோதுகிறது. இந்த போட்டி இன்று (ஆகஸ்ட் 31) பிற்பகல் 3.00 மணிக்கு தொடங்குகிறது.

இதையும் படிங்க: சச்சின் சாதனையை முறியப்பார் ரோகித் சர்மா? - ஆசிய கோப்பையில் ஒளிந்துள்ள ரகசியம்!

Last Updated : Aug 31, 2023, 7:35 AM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.