லண்டன்: மான்செஸ்டர், ஓல்ட் டிராஃபோர்டில் வைத்து ஆஸ்திரேலியா - இங்கிலாந்து இடையேயான நான்காவது போட்டி நடைபெற்று வருகிறது. இதில் முதலில் பேட் செய்த ஆஸ்திரேலிய அணி, முதல் இன்னிங்ஸில் 317 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. இதனையடுத்து தனது முதல் இன்னிங்ஸை தொடங்கிய இங்கிலாந்து அணி அபாரமாக விளையாடி 107.4 ஓவர்களில் 592 எடுத்து ஆட்டமிழந்தது.
அதிகபட்சமாக ஜாக் கிராலி 21 பவுண்டரிகள் மற்றும் 3 சிக்ஸர்களுடன் 189, பேர்ஸ்டோவ் 10 பவுண்டரிகள் மற்றும் 4 சிக்ஸர்களுடன் 99 ரன்கள், ஜோ ரூட் 5 பவுண்டரிகளுடன் 61 ரன்கள், மொயின் அலி 7 பவுண்டரிகளுடன் 54 ரன்கள், ஸ்டோக்ஸ் 51 ரன்களும் சேர்த்தனர். இதனையடுத்து 275 ரன்கள் பின் தங்கிய நிலையில் தனது 2வது இன்னிங்ஸை தொடங்கிய ஆஸ்திரேலியா அணி, மூன்றாவது நாள் ஆட்ட நேர முடிவில் 41 ஓவர்களில் 4 விக்கெட்டுகள் இழப்பிற்கு 114 ரன்கள் சேர்த்த்து.
இதையும் படிங்க: நான் வீழ்வேனென்று நினைத்தாயோ... ஃபீனிக்ஸ் பறவையாக ஃபார்முக்கு திரும்பிய விராட் கோலி!!
கவாஜா 2 பவுண்டரிகளுடன் 18, வார்னர் 3 பவுண்டரிகளுடன் 28, ஸ்மித் 17, ஹெட் 17 ரன்களிலும் ஆட்டமிழந்தனர். லபுசன் 44, மிட்செல் மார்ஸ் 1 ரன்களிலும் ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தனர். இதனைத் தொடர்ந்து நேற்று (ஜூலை 22) மழையின் காரணமாக ஆட்டம் மதிய உணவு இடைவேளைக்கு பின்னரே தொடங்கியது.
லபுசன் அதிரடியாக விளையாடி சதம் அடித்தார். இது அவரது 11வது சதமாகும். 173 பந்துகளில் 10 பவுண்டரிகளும், 2 சிக்ஸர்களும் அடித்து 111 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழந்தார். 71 ஓவர்களில் 5 விக்கெட்டுகள் இழப்பிற்கு 214 ரன்கள் சேர்த்துள்ளது. இங்கிலாந்து பந்து வீச்சு சார்பில் மார்க் வுட் 3 விக்கெட்டுகள் எடுத்து அசத்தியுள்ளார். கிறிஸ் வோக்ஸ் மற்றும் ஜோ ரூட் தலா 1 விக்கெட்டுகளை எடுத்தனர். மார்ஸ் 4 பவுண்டரிகளுடன் 31 ரன்களிலும், கீரின் 3 ரன்களிலும் களத்தில் உள்ளனர்.
இன்னும் ஒரு நாளே இருக்கும் பட்சத்தில் ஆட்டம் டிராவாக அதிக வாய்ப்புள்ளது. நடந்து முடிந்த மூன்று போட்டிகளில் ஆஸ்திரேலியா அணி 2 வெற்றிகள் பெற்று முன்னிலையில் இருப்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: IND VS WI: 3வது நாள் முடிவில் வெஸ்ட் இண்டீஸ் அணி 229/5