சென்னை முகப்பேர் தனியார் பள்ளியில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்ட சிந்துவிற்கு பாராட்டு விழா நடைபெற்றது.
இதையடுத்து அந்த தனியார் பள்ளி குழுமத்தைச் சேர்ந்த மாணவ, மாணவிகள் பல்வேறு விளையாட்டுப் பிரிவுகளில் தேசிய மற்றும் சர்வதேச அளவில் பங்கேற்று சாதனைப் புரிந்துள்ளதை அறிந்த சிந்து, விளையாட்டு வீரர்களை ஊக்குவிக்கும் வகையில் 60 லட்ச ரூபாய் உதவித்தொகையை வழங்கினார்.
மேலும் மாணவர்களுடன் உரையாடல் நிகழ்த்திய அவர், விளையாட்டின் மீதான விருப்பம், அர்ப்பணிப்பு, எதிர்கால லட்சியம் போன்றவை மாணவர்களை ஈர்க்கும் வகையில் அமைந்துள்ளதாகவும், ஒவ்வொரு மாணவரும் தனக்கு கிடைத்த வாய்ப்பினை சரியாக பயன்படுத்தி வெற்றிபெற பாடுபட வேண்டும் என்றும் அவர் கேட்டுக் கொண்டார் .
பின்னர் செய்தியாளர்களை சந்தித்த பி.வி.சிந்து, பேட்மிண்டன் போட்டியில் தனது சாம்பியன்ஷிப் பட்டத்தை தொடர்ந்து தக்கவைக்க பாடுபடுவேன் என்றும், அடுத்து வரும் போட்டியிலும் வெற்றி பெறுவதற்கான அனைத்து முயற்சிகளையும் எடுத்து வருவதாகவும் தெரிவித்தார்.
மேலும் காயங்கள் என்பது திடீரென ஏற்படுவதுதான். ஆனால் அது நிரந்தரமல்ல என்று கூறிய பி.வி.சிந்து, வரக்கூடிய ஒலிம்பிக் போட்டியில் பங்குபெற்று வெல்வதே தமது லட்சியம் என்று தெரிவித்தார்.
இதையும் படிங்க: ஹாட்ரிக் நாயகர்கள் பிரட் லீ, மலிங்கா வரிசையில் இணைந்த ஓமன் வீரர்!