ETV Bharat / sports

டென்மார்க் ஓபன் பேட்மிண்டன்: வெளியேறிய கிடாம்பி ஸ்ரீகாந்த்!

கோஃபன்ஹெகன்: டென்மார்க் ஓபன் பேட்மிண்டன் தொடரின் காலிறுதிப் போட்டியில் இந்திய வீரர் கிடாம்பி ஸ்ரீகாந்த் தோல்வியடைந்து வெளியேறினார்.

kidambi-srikanth-knocked-out-of-denmark-open-quarters

author img

By

Published : Oct 17, 2020, 3:27 PM IST

டென்மார்க் ஓபன் பேட்மிண்டன் தொடரில் காலிறுதி ஆட்டத்தில் இந்திய வீரர் கிடாம்பி ஸ்ரீகாந்த், சீனாவின் டியென் செனை எதிர்த்து ஆடினார். ஆட்டத்தின் தொடக்கத்தில் சீனா வீரர் 6-2 என முன்னிலை வகிக்க, சுதாரித்து ஆடிய கிடாம்பி 10-10க்கு என சவாலளித்தார். ஆனால் முதல் செட் ஆட்டத்தின் இறுதியில் சீனா வீரர் டியென் சென் 22-20 என கைப்பற்றினார்.

இதனைத்தொடர்ந்து நடந்த இரண்டாம் செட் ஆட்டத்தின் தொடக்கம் முதலே சீன வீரரின் கை ஓங்கியிருந்தது. இதன் காரணமாக 21-13 என கணக்கில் கைப்பற்ற, மூன்றாவது செட் ஆட்டம் தொடங்கியது.

இதில் சீனா வீரர் 19-11 என வெற்றியின் விளிம்பிற்குச் சென்றாலும், கடும் சவாலளித்த ஸ்ரீகாந்த் இறுதியாக 21-16 என்ற கணக்கில் தோல்வியடைந்தார்.

இதனால் இந்திய வீரர் கிடாம்பி டென்மார்க் ஓபன் பேட்மிண்டன் தொடரிலிருந்து வெளியேற்றப்பட்டார்.

இதையும் படிங்க: ஐபிஎல் 2020 : விக்கெட்டில் அரைசதம் அடித்த ட்ரெண்ட் போல்ட்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.