ETV Bharat / sports

தெற்காசிய போட்டியில் இந்தியா தங்க வேட்டை!

author img

By

Published : Dec 3, 2019, 10:11 AM IST

போக்ஹராவில் நடைபெற்றுவரும் தெற்காசிய போட்டியில், பேட்மிண்டன் பிரிவில் இந்திய ஆடவர், மகளிர் அணிகள் இரண்டு தங்கப்பதக்கங்களை வென்றுள்ளது.

Indian badminton team
Indian badminton team

நேபாளத்திலுள்ள காத்மண்டு, போக்ஹராவில் 13ஆவது தெற்காசிய விளையாட்டு போட்டிகள் நடைபெற்றுவருகின்றன. இதில், பேட்மிண்டன் பிரிவில் நேற்று நடைபெற்ற இறுதிப் போட்டியில் கிதாம்பி ஸ்ரீகாந்த் தலைமையிலான இந்திய ஆடவர் அணி இலங்கை அணியுடன் மோதியது. இதில், ஒற்றையர் பிரிவில் கிதாம்பி ஸ்ரீகாந்த் 17-21, 21-15, 21-11 என முதல் போட்டியில் இலங்கையின் தினுகா கருணாரத்னேவை தோற்கடித்தார்.

இதைத்தொடர்ந்து, நடைபெற்ற மற்றொரு ஒற்றையர் பிரிவில் இந்தியாவின் சமீர் வர்மா 21-17, 11-5 என்ற கணக்கில் இலங்கை வீரர் சச்சின் பரமேஸ்வரனுடனான போட்டியில் முன்னிலை பெற்றிருந்தார். அப்போது, காயம் காரணமாக சச்சின் பரமேஸ்வரன் விலகியதால், இந்திய அணி 2-0 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கத்தொடங்கியது.

  • GOLD🔥Touch!

    Indian🇮🇳 Men's team end the team championships with a Gold🥇Medal as they defeated Sri Lanka🇱🇰 3⃣-1⃣ in the finals of 13th South Asian Games in Nepal.
    Kudos Guys! Keep the momentum going. 💪👏#IndiaontheRise#badminton pic.twitter.com/AnJ9wk18Sl

    — BAI Media (@BAI_Media) December 2, 2019 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

இதையடுத்து, ஆடவர் இரட்டையர் பிரிவில் இந்தியாவின் அருண் ஜார்ஜ், சன்யாம் சுக்லா ஜோடி 18-21 21-14 11-21 என்ற செட் கணக்கில் இலங்கையின் சச்சின் - தரிந்து இணையிடம் தோல்வியடைந்தது. இந்த நிலையில், நடைபெற்ற இரண்டாவது இரட்டையர் பிரிவு போட்டியில் கிருஷ்ண பிரசாத் - துருவ் கபிலா இணை 21-14 21-18 என்ற நேர்செட் கணக்கில் கருணாரத்னே - ஹசிதா சனக்கா ஜோடியை வீழ்த்தியது. இதன் மூலம், இந்திய ஆடவர் அணி இப்போட்டியில் 3-1 என்ற புள்ளிகள் கணக்கில் இலங்கை அணியை வீழ்த்தி தங்கப் பதக்கம் வென்றது.

  • Double Delight in Nepal!💪

    🇮🇳 Women's Team picked up the second 🥇of the day as they defeated Sri Lanka🇱🇰 3⃣-0⃣ in the finals to bag the "Golden Crown." Kudos.

    🏸@AshmitaChaliha - 21-12;21-13
    🏸Aakarshi Kashyap-21-19, 21-10
    🏸Gayatri Gopichand P-13-21; 21-18,21-10#badminton pic.twitter.com/uwA8AKYGkW

இதேபோல, நடைபெற்ற மகளிர் அணி பிரிவிலும் இந்திய அணி 3-0 என்ற கணக்கில் இலங்கையை வீழ்த்தி தங்கம் வென்றது. பேட்மிண்டன் அணிகளுக்கான போட்டியில் இந்தியா இரண்டு தங்கம் வென்றதன் மூலம், இந்தத் தொடரில் ஐந்து தங்கம், எட்டு வெள்ளி, மூன்று வெண்கலம் என 16 பதக்கங்களுடன், பட்டியலில் இரண்டாவது இடத்தில் உள்ளது.

இந்தத்தொடரில் பேட்மிண்டன் தனிநபருக்கான போட்டி நாளை மறுநாள் (டிசம்பர் 5) தேதி நடைபெறவுள்ளது. இந்தத் தொடரில் இந்தியா சார்பில் 487 வீரர்கள், 15 போட்டிகளில் பங்கேற்றுவருகின்றனர்.

இதையும் படிங்க: பி.பி.எல். பேட்மிண்டன் - பி.வி. சிந்து ரூ. 77 லட்சத்திற்கு ஏலம்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.