பேட்மிண்டன் பிரீமியர் லீக் தொடரின் மூன்றாவது சுற்றுக்கான போட்டிகள் ஹைதராபாத்தில் நடந்துவருகிறது. முதல்நாளான நேற்று உள்ளூர் அணியான ஹைதராபாத் ஹண்டர்ஸ் அணியை எதிர்த்து நார்த் ஈஸ்டர்ன் வாரியர்ஸ் அணி ஆடியது. இதில் யாரும் எதிர்பாராத வண்ணம் நட்சத்திர டென்னிஸ் வீராங்கனையும், ஹைதராபாத் அணியின் கேப்டனுமான பி.வி. சிந்துவை எதிர்த்து மிட்சல் லீ ஆடினார். இதில் 15-8, 15-9 என்ற கணக்கில் அதிர்ச்சி தோல்வியடைந்தார்.
இதையடுத்து இரட்டையர் பிரிவில் சிக்கி ரெட்டி - இவனோவ் இணையை எதிர்த்து கிருஷ்ண பிரசாத் - கிம் இணை ஆடியது. அதில் 15-12, 8-15, 15-12 என்ற கணக்கில் சிக்கி ரெட்டி இணை வென்றது. இதையடுத்து நடைபெற்ற சவுரப் வர்மா - தனோன்சக் ஆகிய இருவருக்கும் இடையேயான ஆட்டத்தில் 15-14, 15-14 எனக் கைப்பற்றி ஹைதராபாத் அணி வெற்றிபெற்றது.
இதைத்தொடர்ந்து பென் லேன் - இவனோவ் இணைக்கு எதிராக ஆடிய போடின் இசாரா - லீ யாங் இணை ஆடியது. அதில் 15-7, 15-10 என ஹைதராபாத் அணி அபாரமாக வெற்றிபெற்றது. இறுதியாக ஹைதராபாத் ஹண்டர்ஸ் அணி 2-1 என்ற கணக்கில் நார்த் ஈஸ்டர்ன் அணியை வீழ்த்தியது.
பின்னர் ஈ டிவி பாரத்துக்கு சிறப்பு பேட்டியளித்த சிக்கி ரெட்டி, ''எங்கள் அணி இன்னும் சிறப்பாக ஆடியிருக்க வேண்டும். தொழில்முறை போட்டி என்றாலும், முடிவுகள் நிச்சயம் கவனிக்கப்படும். 2-1 என்ற முடிவால் மகிழ்ச்சியாக உள்ளது. ஹைதராபாத் ரசிகர்கள் தொடர்ந்து எங்களுக்கு ஆதரவளிக்க வேண்டும். பி.வி. சிந்துவுக்கு இன்றைய நாள் சரியாக அமையவில்லை. அதனை வரும் நாள்களில் சரி செய்துகொள்வார்'' என்றார்.
இதையும் படிங்க: சங்ககாரா தலைமையில் பாகிஸ்தானில் களமிறங்குகிறது எம்சிசி!