ETV Bharat / sports

தகுதிச்சுற்று போட்டிகள் ஒத்திவைப்பு - பி.டபிள்யூ.எஃப்! - கோவிட்-19 செய்திகள்

கோவிட்-19 பெருந்தொற்று காரணமாக இந்தாண்டு நடைபெறவிருந்த ஒலிம்பிக் பேட்மிண்டன் தகுதிச்சுற்று போட்டிகளை அடுத்த ஆண்டிற்கு ஒத்திவைப்பதாக சர்வதேச பேட்மிண்டன் கூட்டமைப்பு(BWF) தெரிவித்துள்ளது.

BWF extends Olympic qualification period to next year, ranking points to be maintained

author img

By

Published : May 28, 2020, 12:21 PM IST

கோவிட்-19 பெருந்தொற்றால் இதுவரை உலகம் முழுவதும் 57 லட்சம் பேர் பாதிக்கப்பட்டு, மூன்று லட்சத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழந்தும் உள்ளனர். இப்பெருந்தொற்றினால் ஒலிம்பிக், ஐபிஎல் உள்ளிட்ட பல விளையாட்டு தொடர்கள் ஒத்திவைக்கப்பட்டுள்ளன.

இந்நிலையில், சர்வதேச பேட்மிண்டன் கூட்டமைப்பு, ஒலிம்பிக் விளையாட்டுகளுக்கான தகுதிச்சுற்று போட்டிகளை அடுத்த ஆண்டிற்கு ஒத்திவைப்பதாக அறிவித்துள்ளது. இதுகுறித்து அக்கூட்டமைப்பு வெளியிட்ட அறிக்கையில்,

"2021ஆம் ஆண்டின் முதல் 17 வாரங்களில் ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிகளுக்கான தகுதிச்சுற்று போட்டிகள் நடைபெறும். மேலும் கோவிட்-19 பெருந்தொற்றால் பாதிக்கப்பட்ட பேட்மிண்டன் தொடர்களும் இதில் அடங்கும் என்பதையும் சர்வதேச பேட்மிண்டன் கூட்டமைப்பு தெரிவிக்கிறது" என குறிப்பிட்டுள்ளது.

" class="align-text-top noRightClick twitterSection" data=" ">

அதேபோல், கோவிட்-19 பெருந்தொற்றினால் ஒத்திவைக்கப்பட்ட பேட்மிண்டன் தொடர்களின் போது வீரர்களின் தரவரிசைக்கான புள்ளிகளும் பராமரிக்கப்படும் என்றும் சர்வதேச பேட்மிண்டன் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.

இதையும் படிங்க:பயிற்சியில் தடுப்பாட்ட வீரர்களைக் கடந்த மெஸ்ஸி அடித்த சூப்பர் கோல்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.