ETV Bharat / sports

தடகளத்தில் தங்கம் ... உலக சாம்பியன்ஷிப்பிற்கு தகுதி பெற்ற இந்திய வீரர்!

author img

By

Published : Mar 19, 2019, 2:08 PM IST

பாட்டியாலாவில் நடைபெற்று வரும் பெடரேஷன் கோப்பை தடகள போட்டியில், 3000 மீட்டர் ஸ்டீபிள் சேஸ் பிரிவில் இந்திய வீரர் அவினாஷ் சாப்லே தங்கம் வென்றதன் மூலம் ஆசிய மற்றும் உலக தடகள சாம்பியன்ஷிப் போட்டிக்கு தகுதி பெற்றுளளார்.

அவினாஷ் சாப்லே

தேசிய அளவிலான பெடரேஷன் கோப்பை தடகள சாம்பியன்ஷிப் போட்டி பாட்டியாலாவில் நடைபெற்று வருகிறது. இதில், ஆடவர்களுக்கான 3,000 மீட்டர் ஸ்டீபிள் சேஸ் பிரிவு போட்டி நேற்று (மார்ச் 18) நடைபெற்றது.

இதில், சிறப்பாக விளையாடிய மகாராஷ்டிரா மாநிலத்தைச் சேர்ந்த அபினாஷ் சாப்லே இலக்கை எட்டு நிமிடம் 28 நொடிகள் மற்றும் 94 மணித்துளிகளில் கடந்து தங்கம் வென்றார்.

இதன் மூலம், இவர் இந்த பிரிவில் இலக்கை மிக விரைவாக கடந்து புதிய சாதனை படைத்துள்ளார். அத்துடன் கத்தாரில் நடைபெறவுள்ள ஆசிய மற்றும் உலக தடகள சாம்பியன்ஷிப் போட்டிக்கு இவர் தகுதி பெற்றுள்ளார்.

இதேபோல் மகளிருகளுக்கான 400 மீட்டர் பிரிவில் இந்திய வீராங்கனை ஹீமா தாஸ் தங்கம் வென்று இருந்தும் ஆசிய தடகள சாம்பியன்ஷிப் போட்டிக்கு தகுதி பெறும் வாய்ப்பை நழுவ விட்டார்.

Intro:Body:Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.