தமிழில் ’பிக்பாஸ் 4’ சீசன் கடந்த அக்டோபர் மாதம் தொடங்கி விறுவிறுப்பாக நடைபெறுகிறது. இதுவரை வேல்முருகன், ரேகா ஆகியோர் நிகழ்சியில் இருந்து வெளியேறியுள்ளனர்.
அதைத்தொடர்ந்து இந்தவாரம் மூன்றாவது நபராக யார் வெளியேறுவார் என்று தெரிந்து கொள்ள மக்கள் மிகவும் ஆர்வத்துடன் காத்திருக்கின்றனர். இந்நிலையில், இன்று (நவம்பர் 8) வெளியான ப்ரோமோ படி, சனம் ஷெட்டி, சோம் என்று கமல்ஹாசன் கூறிவிட்டு கடைசியாக சுரேஷ் என்று அழைக்கிறார். இதிலிருந்து இருதியாக அழைத்த சுரேஷ் தான் வெளியேறுவார் என்று சமூக வலைதளங்களில் பேசப்படுகிறது.
நிகழ்ச்சி தொடங்கிய நாள் முதல் மிகவும் விறுவிறுப்பாக விளையாடிய சுரேஷ், இறுதி போட்டிவரை செல்வார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், மூன்றாவது வாரமே வெளியேறுவது அவரது ரசிகர்களிடையே ஏமாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க: 'ஈஸ்வரன்' பட டப்பிங் பணியை முடித்த சிம்பு!