பிரின்ஸ் ஹேரி - மேகன் தம்பதியர் நெட்பிளிக்ஸ் நிறுவனத்துடன் ஒப்பந்தம் மேற்கொண்டுள்ளது. கடந்த ஆறு மாதங்களை சொத்து பிரிப்பதில் செலவிட்ட இத்தம்பதியர், தற்போது நெட்பிளிக்ஸ் நிறுவனத்துடன் இணைந்து தயாரிப்பு பணிகளை மேற்கொள்ள முடிவு செய்துள்ளனர்.
இயற்கை சார்ந்த தொடர்கள், ஆவணப் படங்கள் மற்றும் குழந்தைகள் நலன் சார்ந்த நிகழ்ச்சிகளை தயாரிக்க பிரின்ஸ் ஹேரியும் அவரது மனைவியும் முடிவு செய்துள்ளனர். இயற்கை சார்ந்த ஆவணத் தொடர்களும், மக்களை ஊக்குவிக்கும் பெண்கள் பற்றிய தொடர்களும் தற்போது தயார் நிலையில் உள்ளன. ஹேரி தான் தோன்றிய ’ரைசிங் பீனிக்ஸ்’ ஆவணப்படத்தை இயக்கிய பீட்டர் எடட்குய், இயான் போன்ஹோட் ஆகிய இயக்குநர்களுடன் இதுதொடர்பான ஆலோசனையில் உள்ளார்.