தனியார் தொலைக்காட்சியில் கடந்த நான்கு ஆண்டுகளாக தொடர்ந்து ஒளிப்பரப்பாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்ற நிகழ்ச்சி பிக்பாஸ். இதுவரை தமிழில் நான்கு சீசன்கள் நடந்து முடிந்துள்ளது. இந்த நிகழ்ச்சியை நடிகர் கமல் ஹாசன் தொகுத்து வழங்கியதால் அதிக ரசிகர்களை இது கவர்ந்தது. உலகம் முழுவதும் பல மொழிகளில் பிக்பாஸ் நிகழ்ச்சியை நடத்தும் உரிமை எண்டமோல் ஷைன நிறுவனத்திடம் உள்ளது.
தமிழில் விரைவில் பிக்பாஸ் சீசன் 5 தொடங்கவுள்ளது. அதற்கான முன்தயாரிப்பு பணிகள் தற்போது நடைபெறவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதுவரை இந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்கிவந்த கமல் ஹாசன், பிக்பாஸ் - சீசன் 5வை அவரே தயாரித்து வழங்குவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்த நிலையில் பிக்பாஸ் நிகழ்ச்சியை தயாரித்து வந்த எண்டமோல் ஷைன் நிறுவனத்தை பிரெஞ்சு நிறுவனமான பானிஜெய் ( Banijay) விலைக்கு வாங்கிவிட்டதால் எண்டமோல் ஷைன் தயாரித்து வந்த அனைத்து நிகழ்ச்சிகளையும் இனி இந்த புதிய நிறுவனம் தயாரிக்கும் என கூறப்படுகிறது.
பானிஜெய் (Banijay) நிறுவனம், தற்போது தமிழில் சில தொலைக்காட்சி தொடர்களை தயாரித்து வருகிறது. மேலும் கமலின் தயாரிப்பு நிறுவனமான ராஜ்கமல் இண்டர் நேஷனல் நிறுவத்துடன் பானிஜெய் (Banijay) நிறுவனம் இணைந்து ஓடிடியில் வெப் சீரீஸ் தயாரிக்கும் முயற்சியில் இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதனால் இனி பிக்பாஸ் நிகழ்ச்சியை கமல்ஹாசன் தயாரிப்பார் என கூறப்பட்டது.
இந்த தகவல் முற்றிலும் வதந்தி எனவும் பிக்பாஸ் நிகழ்ச்சியின் உரிமை பானிஜெய் (Banijay) நிறுவனத்திடம் தான் உள்ளது. இந்த நிகழ்ச்சியை இந்த நிறுவனம் மட்டும்தான் தாயரிக்கும் பிக்பாஸ் நிகழ்ச்சியை பொறுத்தவரை கமல் ஹாசன் ஒரு தொகுப்பாளர் மட்டுமே. நூறுநாட்கள் நடைபெறும் இந்த நிகழ்ச்சியில் கமல் ஹாசன் தொகுத்து வழங்க 20 நாட்கள் மட்டுமே கால்ஷீட் வழங்கப்படும். மற்றப்படி கமலும் இந்த நிகழ்ச்சிக்கும் எந்தவிதமான சம்மந்தமும் இருக்காது என விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: 'இந்தியன்-2' படத்திற்காக மீண்டும் கமலுடன் இணையும் ஆடை வடிவமைப்பாளர்!