ETV Bharat / sitara

பிக்பாஸ் வீட்டில் நாணயம் கடத்தல் - வெளியான புரொமோ - லேட்டஸ்ட் சினிமா செய்திகள்

நாமினேஷனில் இடம்பெற்றுள்ள 10 நபர்களில் ஒருவர் நாமினேஷனிலிருந்து தப்பிக்கும் வாய்ப்பை பிக்பாஸ் கொடுத்துள்ளார்.

பிக்பாஸ்
பிக்பாஸ்
author img

By

Published : Oct 19, 2021, 12:32 PM IST

பிக்பாஸ் ஐந்தாவது சீசன் தொடங்கி வெற்றிகரமாக சென்றுகொண்டிருக்கிறது. இரண்டு வாரங்கள் நடந்துமுடிந்த நிலையில், முதல் நபராக நாடியா போட்டியிலிருந்து வெளியேறினார்.

இதனையடுத்து நேற்று (அக்டோபர் 18) வாரத்தின் முதல் நாள் என்பதால் பிக்பாஸ் நாமினேஷன் நடைபெற்றது. இதில் இந்த வாரத்தில் மட்டும் 10 பேர் நாமினேட்டாகியுள்ளனர்.

இந்நிலையில் பிக்பாஸ் 15ஆவது நாளுக்கான முதல் புரொமோ வெளியாகியுள்ளது. அருங்காட்சியகமாக மாறும் பிக்பாஸ் வீட்டில் ஐந்து நாணயங்கள் வைக்கப்படுகின்றன.

அதைப் பாதுகாப்பது ஒரு குழுவின் கடமை என்றும், மற்றொரு குழு அதைத் திருடி கேமரா முன்பு காட்ட வேண்டும் என்பதே போட்டி. இதில் அதிகமான நாணயங்கள் கைப்பற்றியவர்கள் இந்த வார நாமினேஷனிலிருந்து காப்பாற்றப்படுவார்கள் என பிக்பாஸ் தெரிவித்தார்.

இதையும் படிங்க: BB Day 14: எதிர்பார்த்த முதல் எலிமினேஷன்... கமலை ஏமாற்றிய அபிஷேக்

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.