ETV Bharat / sitara

ஆர்யா கேரக்டருக்காக ஒரு தசாப்தம் காத்திருந்தேன் - முதல் வெப்சீரிஸ் குறித்து சுஷ்மிதா! - ஆர்யா வெப்சீரிஸ்

சினிமாவிலிருந்து வெப்சீரிஸ் அடியெடுத்து வைத்துள்ள சுஷ்மிதா சென் தனது முதல் தொடரான ஆர்யா பற்றி மனம் திறந்துள்ளார்.

actress sushmitha sen latest news
Sushmitha in webseries
author img

By

Published : Jun 6, 2020, 5:13 PM IST

Updated : Jun 6, 2020, 10:15 PM IST

மும்பை: ஆர்யா கதாபாத்திரத்துக்காக பத்து ஆண்டுகள் வரை காத்திருந்ததாகவும், வாழ்நாளில் சிறந்த கதாபாத்திரம் எனவும் நடிகை சுஷ்மிதா சென் கூறியுள்ளார்.

பாலிவுட், பிராந்திய மொழி படங்களில் நடித்துள்ள சுஷ்மிதா சென் முதல் முறையாக ஆர்யா என்ற வெப்சீரிஸ் மூலம் டிஜிட்டல் தளத்தில் அறிமுகமாகிறார். இதையடுத்து இந்தத் தொடரின் ட்ரெய்லர் தற்போது வெளியாகியுள்ளது. குடும்பம், காதல், க்ரைம் என, அனைத்தும் கலந்த கலவையாக இந்தத் தொடர் உருவாகியுள்ளது.

ஆர்யா என்ற கேரக்டரில் தோன்றும் சுஷ்மிதா சென் இந்தத் தொடரில் நடித்திருப்பது பற்றி கூறியதாவது," இது போன்றதொரு கதாபாத்திரத்தில் நடிக்க பத்து ஆண்டுகள் வரை எதிர்நோக்கி காத்திருந்தேன். இக்கதையில் நடித்திருப்பது மகிழ்ச்சியளிக்கிறது. எனது வாழ்நாளில் சிறந்த கதாபாத்திரமாக கருதும் ஆர்யா கேரக்டரில் நடிக்கும் வாய்ப்பை அளித்த இயக்குநர் ராம் மாத்வானிக்கு நன்றிகள்.

  • " class="align-text-top noRightClick twitterSection" data="">

ஆர்யா கதாபாத்திரம் ஆண்களால் இயங்கும் உலகத்தில் குற்றங்களால் காயப்பட்டு, வலிமை, உறுதியுடன் மீளும் விதமாக அமைந்துள்ளது. குடும்ப உறவு, துரோகம், மகளை காப்பாற்றுவதற்கு எந்த எல்லைக்கும் செல்லும் தாய் என, தனிப்பட்ட முறையில் இந்தக் கதை என்னை மிகவும் கவர்ந்தது என்றார்.

இத்தொடரில் சுஷ்மிதாவின் கணவராக சந்திரசுர் சிங், சட்ட விரோதமாக போதைப் பொருள்களை விற்கும் தொழிலில் ஈடுபடுபவராக நடித்துள்ளார். நெதர்லாந்து நாட்டின் க்ரைம் டிராமா பெனோசா என்ற தொடரை அடிப்படையாகக் கொண்டு, இந்த ஆர்யா தொடர் உருவாகியுள்ளது.

இந்தத் தொடர் ஜூன் 19ஆம் தேதி முதல் டிஸ்னி மற்றும் ஹாட்ஸ்டார் விஐபி ஆகியவற்றில் ஒளிபரப்பாகவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Last Updated : Jun 6, 2020, 10:15 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.