மும்பை: சர்கார் பட நாயகி நடிகை தனிஷா முகர்ஜி (Tanishaa Mukerji) தனக்கு கரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளதாகவும், தன்னை தனிமைப்படுத்திக் கொண்டுள்ளதாகவும் சமூக வலைதளத்தில் தெரிவித்துள்ளார்.
நடிகை கஜோலின் இளைய தங்கையான தனிஷா, நீல் என் நிக்கி, சர்கார், சர்கார் ராஜ் போன்ற படங்களில் நடித்துள்ளார். தமிழில் வினய் நடிப்பில் வெளியான உன்னாலே உன்னாலே திரைப்படத்திலும் நடித்துள்ளார்.
இவரது அறிமுக படமான இஸ்ஸ்.. 2003இல் வெளியானது. தற்போது இவரது நடிப்பில் கோட் நேம் அப்துல் என்ற படத்தில் நடித்திருந்தார். இந்தப் படம் உளவுத் துறை அமைப்பான ரா-வை மையமாக வைத்து எடுக்கப்பட்டது.
படத்தை ஈஸ்வர் குந்துரு இயக்கியிருப்பார். பாலிவுட்டின் புகழ்பெற்ற முகர்ஜி சமரத் குடும்பத்தைச் சேர்ந்த தனிஷா, இந்தி, தெலுங்கு, தமிழ் உள்பட பல்வேறு மொழிப் படங்களில் நடித்துள்ளார்.
தனிஷாவின் மூத்தச் சகோதரி கஜோல் பாலிவுட்டின் முன்னணி நடிகையாக வலம்வந்தவர் என்பது நினைவு கூரத்தக்கது.
இதையும் படிங்க : அமெரிக்கா சென்று கரோனா வாங்கி வந்த கமல்.. எப்படி இருக்கிறார்... மருத்துவமனை அறிக்கை