இயக்குநர் கார்த்திக் சுப்பராஜ் தற்போது தனுஷை வைத்து ’ஜகமே தந்திரம்’ படத்தை எடுத்துள்ளார். இப்படம் விரைவில் வெளியாக உள்ளது.
இந்நிலையில், கார்த்திக் சுப்பராஜ் அடுத்து விக்ரம் மற்றும் அவரது மகன் துருவ் விக்ரமை வைத்து புதிய படம் ஒன்றை இயக்க உள்ளார். இப்படத்தை செவன்த் ஸ்கீரின் ஸ்டூடியோஸ் சார்பில் லலித் குமார் தயாரிக்கிறார்.
அனிருத் இசை அமைக்கும் இப்படத்தின் படப்பிடிப்பு, அடுத்த மாதம் தொடங்க உள்ளதாக கூறப்படுகிறது. மேலும் இந்த ஆண்டே வெளியிடவும் படக்குழுவினர் திட்டமிட்டுள்ளனர்.
இதையும் படிங்க: விஜயின் அடுத்த படத் தயாரிப்பாளர் இவரா?