மதுரை மாவட்டம் பரவை பகுதியைச் சேர்ந்தவர் முனியம்மா. நாட்டுப்புறப் பாடல்கள் பாடிவந்த இவர், தூள் படத்தில் நடித்ததன் மூலம் பிரபலமானார். இதுவரை இவர் 25 படங்களில் நடித்துள்ளார்.
பரவை முனியம்மா கடந்த சில மாதங்களாக சிறுநீரக கோளாறு உள்ளிட்ட உடல்நல பாதிப்பால் சிகிச்சைப் பெற்றுவந்தார். இந்நிலையில் இன்று அதிகாலை உடல்நலக் குறைவால் மதுரையில் உள்ள அவரது இல்லத்தில் உயிரிழந்தார். பரவை முனியம்மாவின் மறைவு குறித்து நகைச்சுவை நடிகர் விவேக் உருக்கமான பதிவு ஒன்றை தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
-
பரவை முனியம்மா அவர்களுடன் நான் நடித்த காட்சிகள் இன்றும் ரசிக்கப் படுகின்றன. நல்ல கிராமியக் குரல் வளம். மண் மணம் வீசிய நல் மனம். வருந்துகிறேன். 😭
— Vivekh actor (@Actor_Vivek) March 29, 2020 " class="align-text-top noRightClick twitterSection" data="
">பரவை முனியம்மா அவர்களுடன் நான் நடித்த காட்சிகள் இன்றும் ரசிக்கப் படுகின்றன. நல்ல கிராமியக் குரல் வளம். மண் மணம் வீசிய நல் மனம். வருந்துகிறேன். 😭
— Vivekh actor (@Actor_Vivek) March 29, 2020பரவை முனியம்மா அவர்களுடன் நான் நடித்த காட்சிகள் இன்றும் ரசிக்கப் படுகின்றன. நல்ல கிராமியக் குரல் வளம். மண் மணம் வீசிய நல் மனம். வருந்துகிறேன். 😭
— Vivekh actor (@Actor_Vivek) March 29, 2020
அதில், "பரவை முனியம்மா அவர்களுடன் நான் நடித்த காட்சிகள் இன்றும் ரசிக்கப்படுகின்றன. நல்ல கிராமியக் குரல் வளம். மண் மணம் வீசிய நல் மனம். வருந்துகிறேன்" என்று குறிப்பிட்டுள்ளார்.
விவேக்கும், பரவை முனியம்மாவும் இணைந்து 'தூள்', 'சண்டை', 'காதல் சடுகுடு', 'தகதிமிதா' உள்ளிட்ட ஏராளமான படங்களில் நடித்துள்ளனர்.
இதையும் படிங்க: பரவை முனியம்மா காலமானார்