நடிகர் விக்ரம் பிரபு தற்போது அறிமுக இயக்குநர் கார்த்திக் சவுத்ரி இயக்கத்தில் ’பாயும் ஒளி நீ எனக்கு’ என்ற படத்தில் நடித்து வருகிறார். இதில் இவருக்கு ஜோடியாக வாணி போஜன் நடித்துள்ளார். கார்த்திக் சவுத்ரி இப்படத்தை இயக்கியுள்ளார்.
இதன் படப்பிடிப்பு ஹைதராபாத்தில் உள்ள ராமோஜி ஃபிலிம் சிட்டியில் நடைபெற்று வந்தது. இதுகுறித்து விக்ரம் பிரபு கூறியதாவது, “எனது இனிய ரசிக பெருமக்களே, வணக்கம். தயாரிப்பாளர் குமாரசுவாமி தயாரிப்பில் நானும், வாணி போஜனும் இணைந்து நடித்துள்ள படம் 'பாயும் ஒளி நீ எனக்கு'.
இப்படத்தின் படப்பிடிப்பு கடந்த 55 நாள்களாக ஹைதராபாத்தில் உள்ள ராமோஜி ராவ் ஃபிலிம் சிட்டியில் நடைபெற்ற நிலையில், வெற்றிகரமாக முடிந்து சென்னை திரும்பிவிட்டோம்.
இவ்வளவு விரைவாக முடித்ததன் நோக்கமே, அனைவரும் தங்களின் ஜனநாயகக் கடமையை நிறைவேற்ற வேண்டும் என்பதுதான். ஏப்ரல் 6 நமது வாக்குரிமையைத் தவறாது நிறைவேற்ற மறக்காமல் வாக்குச்சாவடிக்குச் சென்று வாக்களியுங்கள்” என்று தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க: ஓடிடியில் வெளியான யோகிபாபுவின் 'மண்டேலா'!