‘இமைக்கா நொடிகள்’ படத்தைத் தொடர்ந்து இயக்குநர் அஜய் ஞானமுத்து இயக்கத்தில் உருவாகும் படம் ‘கோப்ரா’. இதில் நடிகர் விக்ரம், கிரிக்கெட் வீரர் இர்பான் பதான், இயக்குநர் கே.எஸ். ரவிக்குமார் உள்ளிட்டோர் நடித்துவருகின்றனர்.
விறுவிறுப்பாக நடைபெற்றுவரும் இப்படத்தின் டீசர் இன்று (ஜன. 09) வெளியாகும் எனப் படக்குழு அறிவித்திருந்தது. அறிவித்தபடி ‘கோப்ரா’ படத்தின் டீசரை படக்குழு வெளியிட்டுள்ளது. சுமார் 1 நிமிடம் 47 நொடி உள்ள இந்த டீசர் பரபரப்புக்குக் குறைவு இல்லாமல் நகர்கிறது.
மேலும் விக்ரம் இதில் மதி என்ற பெயரில் கணக்கு வாத்தியாராக நடித்துள்ளார். அதுமட்டுமின்றி தனது கணிதத் திறமை மூலம் ஏராளமான சட்டவிரோதச் செயல்களைச் செய்கிறார் என்பதும் டீசர் மூலம் தெரிகிறது.
-
A world of numbers & the genius #ChiyaanVikram,Loaded wit all things intriguing,presenting the #CobraTeaser dir. by @AjayGnanamuthu,An @arrahman
— Seven Screen Studio (@7screenstudio) January 9, 2021 " class="align-text-top noRightClick twitterSection" data="
Musical
Link:- https://t.co/U0e51ixlVF#Cobra @Lalit_SevenScr@IrfanPathan@SrinidhiShetty7@roshanmathew22 @theedittable @dop_harish
">A world of numbers & the genius #ChiyaanVikram,Loaded wit all things intriguing,presenting the #CobraTeaser dir. by @AjayGnanamuthu,An @arrahman
— Seven Screen Studio (@7screenstudio) January 9, 2021
Musical
Link:- https://t.co/U0e51ixlVF#Cobra @Lalit_SevenScr@IrfanPathan@SrinidhiShetty7@roshanmathew22 @theedittable @dop_harishA world of numbers & the genius #ChiyaanVikram,Loaded wit all things intriguing,presenting the #CobraTeaser dir. by @AjayGnanamuthu,An @arrahman
— Seven Screen Studio (@7screenstudio) January 9, 2021
Musical
Link:- https://t.co/U0e51ixlVF#Cobra @Lalit_SevenScr@IrfanPathan@SrinidhiShetty7@roshanmathew22 @theedittable @dop_harish
ஆரம்பம் முதல் இறுதி வரை பரபரப்புக்குப் பஞ்சமில்லாமல் நகரும் ’கோப்ரா’ பட டீசர், விக்ரம் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றுவருகிறது.
இதையும் படிங்க: விஜய் எனக்குத் தெய்வம் போன்றவர் - இயக்கத்திலிருந்து நீக்கப்பட்ட ரவிராஜா கருத்து