கால்பந்து விளையாட்டை மையமாக வைத்து வெளிவந்த 'பிகில்' திரைப்படம் ரசிகர்களைக் கவர்ந்தது. படத்தில் இடம்பெற்ற 'சிங்கப்பெண்ணே' பாடல் பட்டிதொட்டியெங்கும் சூப்பர் ஹிட்டான நிலையில், கால்பந்து வீராங்கனைகளாகத் தோன்றிய பெண்களின் நடிப்பு வெகுவாகப் பாராட்டைப் பெற்றது.
மேலும், ராயப்பன் என்ற கதாபாத்திரத்தில் தோன்றிய தந்தை விஜய்யின் நடிப்பு ரசிகர்களைப் பெரிதும் ஈர்த்தது. பாக்ஸ் ஆபிஸில் நல்ல ஓபனிங்கை கொடுத்துள்ள 'பிகில்' தமிழ், தெலுங்கு ஆகிய இரு மொழிகளில் வெளியாகியுள்ளது.
-
😘😘😘😘😘😘😘😘😘😘 https://t.co/bUHawdrIFf
— Kaajal Pasupathi (@kaajalActress) November 5, 2019 " class="align-text-top noRightClick twitterSection" data="
">😘😘😘😘😘😘😘😘😘😘 https://t.co/bUHawdrIFf
— Kaajal Pasupathi (@kaajalActress) November 5, 2019😘😘😘😘😘😘😘😘😘😘 https://t.co/bUHawdrIFf
— Kaajal Pasupathi (@kaajalActress) November 5, 2019
மேலும், இந்தியா தவிர பிற நாடுகளிலும் படம் வெளியாகி நல்ல வசூலை ஈட்டிவருகிறது. இதனிடையே அரபு நாடுகளில் ஒன்றான ஜோர்டனில் படத்தை திரையிடவுள்ளனர். இதன்மூலம் அங்கு வெளியாகும் முதல் திரைப்படம் என்ற சாதனையை 'பிகில்' படம் படைக்கவுள்ளது. இப்படத்தின் ட்ரெய்லரில் நயன்தாரா விஜய்யிடம் காதலுக்கு மரியாதையலெல்லாம் மறந்தே போச்சு என்று சொல்லுவார்.
தற்போது நடிகை காஜல் பசுபதி தனது ட்விட்டர் பக்கத்தில் வீடியோ ஒன்றை பதிவிட்டுள்ளார். அதில், விஜய் பிரபல தொலைக்காட்சி நிகழ்ச்சியில் 'காதலுக்கு மரியாதை' திரைப்படத்தில் இடம்பெற்ற 'என்னை தாலாட்ட வருவாளோ' என்ற பாடலை பாடியுள்ளார். அப்போது எடுக்கப்பட்ட வீடியோ தற்போது வெளியாகி வைரலாகி வருகிறது.
இதையும் வாசிங்க: முதல் முறையாக 'பிகில்' படைக்கும் சாதனை