சேவியர் பிரிட்டோ தயாரிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிப்பில் வெளியான படம் 'மாஸ்டர்'. இதில் விஜய்சேதுபதி, மாளவிகா மோகனன், ஆண்ட்ரியா உள்ளிட்டோர் நடித்திருந்தனர். பொங்கல் வெளியீடாக திரையரங்குகளில் ஜனவரி 13ஆம் தேதி வெளியான இப்படம் வசூலில் சாதனைபுரிந்தது.
அதுமட்டுமின்றி, கரோனா அச்சம் காரணமாக நீண்ட மாதங்களாக திரையரங்குகளில் பெரிய படங்கள் வெளியாகாமல் இருந்த நிலையில், 'மாஸ்டர்' வெளியாகி திரையரங்குகளை மீட்டது.
'மாஸ்டர்' படத்தின் பாடல்கள், டீசர் என அனைத்தும் சமூக வலைதளத்தில் பெரும் சாதனைகளைப் படைத்துவருகின்றன. இந்நிலையில், 'மாஸ்டர்' படத்தின் இணை தயாரிப்பாளரான ஸ்வென் ஸ்கிரீன் ஸ்டுடியோ லலித் குமாருடன் விஜய் வேட்டி சட்டையுடன் இருக்கும் புகைப்படம் தற்போது சமூக வலைதளத்தில் வைரலாகிவருகிறது.
இதையும் பாருங்க: சிவப்பு கலர் சிங்குச்சா... மாஸ் காட்டும் 'மாஸ்டர்' மாளவிகா..