சென்னை : நடிகர் மற்றும் டப்பிங் கலைஞராக திரையுலகில் பிரபலமானவர் காளிதாஸ். 1980களில் டப்பிங் கலைஞராக ஏராளமான படங்களுக்கு டப்பிங் பேசியுள்ளார். அதிலும் வில்லன் கேரக்டர்களுக்கு இவரது குரல்தான் அதிக வில்லத்தனத்தை காட்டின.
மர்ம தேசம் உள்ளிட்ட சின்னத்திரை தொடர்களிலும் டப்பிங் பேசியுள்ள இவர் சில சின்னத்திரை தொடர்களிலும் நடித்துள்ளார். மாயா மச்சீந்திரா போன்ற தொடர்களின் மூலம் குழந்தைகளுக்கு பிடித்தவராக மாறினார்.
அதுமட்டுமல்லாமல் வெள்ளித்திரையில் வடிவேலுடன் இவர் செய்த காமெடிகள் இன்றுவரை மறக்கமுடியாதவை.
சுமார் 3000 படங்களுக்கு மேல் டப்பிங் பேசியுள்ள இவருக்கு ரத்தத்தில் பிரச்சினை இருந்தது. இதற்காக சிகிச்சை எடுத்து வந்தார். இந்நிலையில், சில தினங்களுக்கு முன் மீண்டும் பிரச்சினை ஏற்பட்டு சிகிச்சை பெற்று வந்த இவர் சிகிச்சை பலனின்றி இன்று (ஆக.12) உயிரிழந்தார்.
இவரது மனைவி ஏற்கனவே இறந்துவிட்ட நிலையில் விஜய் மற்றும் பார்கவி என இரு குழந்தைகள் உள்ளனர். இவரது மறைவுக்கு திரையுலகினர் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.
இதையும் படிங்க : 'மக்களின் மருத்துவர்' காலமானார்!