ETV Bharat / sitara

அசுரன் தெலுங்கு ரீமேக் ஓடிடியில் வெளியாகும் தேதி அறிவிப்பு

'அசுரன்' படத்தின் தெலுங்கு ரீமேக்கான 'நாரப்பா' நேரடியாக ஓடிடியில் வெளியாகும் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.

narappa
narappa
author img

By

Published : Jul 13, 2021, 8:27 AM IST

தனுஷ் - வெற்றிமாறன் கூட்டணியில் நான்காவது படமாக வெளியானது 'அசுரன்'. இப்படம் ரசிகர்களின் பாராட்டைப் பெற்று சூப்பர் ஹிட்டானது.

சிறந்த படம், சிறந்த நடிகர் என்னும் இரண்டு தேசிய விருதுகளை இந்தப் படம் வென்றது. தற்போது, இந்தப்படம் தெலுங்கில் வெங்கடேஷ் நடிப்பில் ரீமேக்காக 'நாரப்பா' என்ற பெயரில் உருவாகி வருகிறது. வெங்கடேஷின் 74ஆவது படமாக இப்படம் உருவாகி வருகிறது.

கலைப்புலி தாணு தெலுங்கு பதிப்பையும் தயாரித்துள்ளார். இப்படத்தை ஸ்ரீகாந்த் அட்லா இயக்கியுள்ளார். மணிசர்மா இசையமைத்துள்ளார். மஞ்சு வாரியர் கதாபாத்திரத்தில் பிரியாமணி நடித்துள்ளார் . கரைப்பல், கையில் அரிவாளுடன் நடிகர் தனுஷ் உக்கிரமான முகத்துடன் நடந்து வரும் தமிழ் 'அசுரன்' பட போஸ்டர் போல், தெலுங்கிலும் அதே பாணியில் வெங்கடேஷ் கோபத்துடன் நடந்து வரும் போஸ்டர், டீசர் அவரது ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

  • All my well-wishers and fans have been eagerly waiting to watch our film, #Narappa. Your love towards this film has been overwhelming for me and the team, who always ensured to go an extra mile just like Narappa. pic.twitter.com/5lEMa86pRb

    — Venkatesh Daggubati (@VenkyMama) July 12, 2021 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

இப்படம் மே 14ஆம் தேதி வெளியாகும் எனவும், ட்ரெய்லர் விரைவில் வெளியிடப்படும் எனவும் படக்குழுவினர் அறிவித்திருந்தனர். ஆனால், கரோனா பரவல் காரணமாக வெளியீட்டு தேதி தள்ளிப்போட்ட படக்குழு, கரோனா சூழல் மாறியதும் படம் வெளியாகும் எனத் தெரிவித்திருந்தது.

கரோனா அச்சுறுத்தல் காரணமாக நாரப்பா படத்தின் வெளியீட்டு தேதி ஒத்திவைக்கப்பட்ட நிலையில், படத்தை நேரடியாக ஓடிடியில் வெளியிட படக்குழு முடிவு செய்தது.

இதனையடுத்து, முன்னணி ஓடிடி தளமான அமேசான் பிரைம் நாரப்பாவின் வெளியீட்டு உரிமையை கைப்பற்றியது. ஜூலை 20ஆம் தேதி இப்படம் வெளியாகும் எனவும் அமேசான் பிரைம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

இதையும் படிங்க: தெலுங்கு பிரின்ஸ் மகேஷ் பாபுவுக்கு சேலஞ்ச் விடுத்த 'நாரப்பா' வெங்கடேஷ்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.