பிரான்ஸில் நடைபெறும் கேன்ஸ் திரைப்பட விழா, உலகின் மிகப்பெரிய திரைப்பட விழாவாகும். இதற்கு அடுத்தப்படியாக இருப்பது வெனிஸ் திரைப்பட விழா. மூன்றாவதாக சிட்னி திரைப்பட விழா இருக்கிறது.
கரோனா அச்சம் காரணமாக உலகின் பிரபலமான பல்வேறு திரைப்பட விழாக்கள் நிறுத்தி வைக்கப்பட்ட நிலையில், வெனிஸ் திரைப்பட விழா இந்தாண்டு செப்டம்பர் மாதத்தில் திட்டமிட்டபடி நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
அதன்படி, 2020ஆம் ஆண்டு செப்டம்பர் 2ஆம் தேதி முதல் 12ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. இது குறித்து வெனெட்டோ கவர்னர் லூகா ஜாயா (Luca Zaia) கூறுகையில், "இந்தாண்டு திட்டமிட்டபடி திரைப்பட விழா நடைபெறும். ஆனால், குறைவான படங்களே இந்தாண்டு திரையிட திட்டமிட்டுள்ளோம் என்றார். கரோனா வைரஸ் தாக்கத்திற்கு பெரும் பாதிப்புக்குள்ளான நாடு இத்தாலி ஆகும். ஜூன் மாதத்தில் இருந்து இத்தாலி தனது எல்லைகளை கட்டுப்பாடுகள் இன்றி திறக்க உள்ளது.
இதையும் படிங்க: கொரோனா பீதி: இத்தாலியில் உலகப் புகழ்பெற்ற திருவிழா ரத்து!