பாடலாசிரியர் வைரமுத்து தனது 67ஆவது பிறந்தநாளை வரும் 13ஆம் தேதி கொண்டாடவுள்ளார்.இந்நிலையில் தனது பிறந்தநாளன்று ரசிகர்கள், ஏழை மக்களுக்கு முகக்கவசம் கொடுக்குமாறு தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அதில் அவர் கூறியதாவது, "நீங்கள் நின்ற இடம் நின்று நினைத்தாலே போதும்; உள்ளத்துப் பேரன்பை உள்ளுணர்வு உற்றறியும்.
ஏழைகளுக்கு முகக்கவசம் வழங்குங்கள். எங்கே போய்விடும் காலம்? அடுத்த ஆண்டு உங்கள் உள்ளங்கை தொட்டு வாழ்த்துகள் வாங்குவேன்.
வாழ்க வையகம் வாழ்க உயிர்க்குலம் வெல்க மானுடம்" என்று தெரிவித்துள்ளார்.