ETV Bharat / sitara

வடிவேலுவுக்கா இந்த நிலைமை! பரிதாபப்படும் ரசிகர்கள் - திரைப்படத்திற்கு முழுக்கு

திரைப்படங்களில் நடிக்க வாய்ப்பில்லாத நிலையில், வடிவேலு வெப் சீரிஸில் நடிக்கவிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

வடிவேலு
author img

By

Published : Jun 25, 2019, 11:55 AM IST

இவர் பெயரைக் கேட்டால் மட்டுமல்ல அவரைப் பார்த்தாலே சிரிப்பு வந்துவிடும். ரசிகர்களின் சிரிப்பு வெடி என்றால் அது வடிவேலுதான். குழந்தைகள் முதல் பெரியவர் வரை இவரது காமெடியை ரசிக்காதவர்கள் எவரும் இல்லை. ரஜினி கமல், அஜித், விஜய், சூர்யா என மாஸ் ஹீரோக்களுடன் இணைந்து பல படங்களில் நடித்துள்ளார். சந்திரமுகி படத்தில் ரஜினியுடன் நடிக்கையில் 'மாப்பு வச்சிட்டான்டா ஆப்பு' என்ற வசனம் இன்று பலரது பேச்சுக்களில் இடம்பெறுவது எதார்த்தமாகிவிட்டது.

வடிவேலு
வடிவேலு

ஃப்ரண்ட்ஸ் படத்தில் நடித்த 'கான்ட்ராக்டர் நேசமணி' என்ற கதாப்பாத்திரம் சமீபத்தில் உலக அளவில் ட்ரெண்டிங்கை ஏற்படுத்தியது. அந்த அளவிற்கு பெயரும் புகழும் கொண்ட வடிவேலு 1989ஆம் ஆண்டு தொடங்கி படிப்படியாக தமிழ் ரசிகர்களின் மனதில் நீங்கா இடம் பிடித்தார். ஆனால் 2017ஆம் ஆண்டு வெளிவந்த மெர்சல் படத்துடன் அவரது சினிமா பயணம் தடைபட்டு நின்றுள்ளது. இம்சை அரசன் 23ஆம் புலிகேசி இரண்டாம் பாகத்தின் படப்பிடிப்பு பாதியில் நின்றது. இப்படத்தில் ஏற்பட்ட பிரச்னைக்குப் பிறகு இவர் நடிக்கவிருந்த படங்களில் கழட்டிவிடப்பட்டார்.

இம்சை அரசன் வடிவேலு
இம்சை அரசன் வடிவேலு

படங்களில் நடிக்கவியலாமல் இருக்கும் வடிவேலு, தற்போது வெப் சீரிஸில் நடிக்கவிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. வெப்சீரிஸில் வடிவேலுவை நடிக்க வைக்க பல வெப் சீரிஸ் நிறுவனங்கள் பேச்சுவார்த்தை நடத்திவருவதாகக் கூறப்படுகிறது. இதுகுறித்து வடிவேலு தரப்பில் மௌனம் காத்து வருகின்றனரே தவிர மறுப்பு தெரிவிக்கவில்லை.

மேலும், வடிவேலு வெப் சீரிஸில் நடிக்கவிருக்கும் செய்தி கேட்ட நெட்டிசன்கள் 'வடிவேலுவுக்கா இந்த நிலைமை? நல்லா பெரியா ஆப்பா வச்சுட்டாங்களே!' என்று அவர் பாணியிலே அங்கலாய்த்து வருகின்றனர்.

Intro:Body:Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.