ETV Bharat / sitara

பெண்ணை ஏமாற்றிய வழக்கு: ஆர்யா போல் பேசியதாக இருவர் கைது! - பெண்ணை ஏமாற்றிய வழக்கு

புளியந்தோப்பை சேர்ந்த முகமது ஹர்மான் மற்றும் அவரது மைத்துனர் முகமது ஹுசைனி ஆகியோர்தான் ஆர்யா போல் பேசி அப்பெண்ணை ஏமாற்றியதாக கூறப்படுகிறது.

Two arrested in chennai for cheating a women using arya voice

author img

By

Published : Aug 24, 2021, 8:04 PM IST

சென்னை: ஜெர்மனி வாழ் இலங்கை தமிழ் பெண்ணை திருமணம் செய்து கொள்வதாக ஏமாற்றி பணம் பறித்த வழக்கில், நடிகர் ஆர்யா போல் பேசியதாக புளியந்தோப்பை சேர்ந்த முகமது ஹர்மான் மற்றும் அவரது மைத்துனர் முகமது ஹுசைனி கைது செய்யப்பட்டுள்ளனர்.

நடிகர் ஆர்யா தன்னை திருமணம் செய்து கொள்வதாக ஏமாற்றி பணம் பறித்ததாக ஜெர்மனி வாழ் இலங்கை தமிழ் பெண் ஒருவர் புகார் அளித்தார். இது தொடர்பாக ஆஜராகும்படி சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் உள்ள மத்திய குற்றப்பிரிவு போலீசார் நடிகர் ஆர்யாவுக்கு சம்மன் அனுப்பினார்கள். ஆர்யாவும் அதன்பேரில் மத்திய குற்றப்பிரிவு போலீசார் முன்பு ஆஜரானார்.

இந்த வழக்கு நிலுவையில் உள்ள நிலையில், ஆர்யா போல் பேசி அப்பெண்ணை ஏமாற்றியதாக இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். சென்னை, புளியந்தோப்பை சேர்ந்த முகமது ஹர்மான் மற்றும் அவரது மைத்துனர் முகமது ஹுசைனி ஆகியோர்தான் ஆர்யா போல் பேசி அப்பெண்ணை ஏமாற்றியதாக கூறப்படுகிறது.

இதையும் படிங்க: கே.டி. ராகவன் விவகாரம் - என்ன நடக்கிறது பாஜகவில்?

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.