வாஷிங்டன்: புவி ஈர்ப்பு சக்திக்கு எதிராக ஹாலிவுட் நடிகர் டாம் க்ரூஸ் சாகசம் செய்யும் விடியோவை 'டாப் கன்: மாவெரிக்' படக்குழுவினர்கள் வெளியிட்டுள்ளனர்.
1986இல் டாம் க்ரூஸ் நடிப்பில் வெளியாகி சூப்பர்ஹிட்டான படம் 'டாப் கன்'. 34 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தப் படத்தின் இரண்டாம் பாகம் 'டாப் கன்: மாவெரிக்' என்ற பெயரில் தயாராகிவருகிறது. படத்தில் மாவெரிக் மிட்செல் என்ற கேரக்டரில் ஃபைட்டர் பைலட்டாக தோன்றும் டாம் க்ரூஸ், அமெரிக்க விமானப்படை மாணவர்களுக்கு போர்களின்போது அபாயகரமான சூழ்நிலையை எதிர்கொள்ளும் பயிற்சி அளிக்கிறார்.
அதிரடி ஆக்ஷன், சாகச காட்சிகளில் புகுந்து விளையாடும் இவர், இந்தப் படத்தில் கம்யூட்டர் கிராபிக்ஸ் (சிஜி), டூப் ஏதும் இல்லாமல் ஆபத்தான காட்சிகளில் ரிஸ்க் எடுத்து நடித்துள்ளார். ஃபைட்டர் ஜெட்டை அவர் இயக்குவது, அதைப் பயன்படுத்தி புவி ஈர்ப்பு சக்திக்கு எதிராக சாகசம் செய்யும் விடியோவை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர்.
அதில், மின்னல் வேகத்தில் டாம் க்ரூஸ் ஜெட்டை இயக்கியதைக் கண்டு படக்குழுவினர்களே வியந்துபோயுள்ளனர். ஃபைட்டர் ஜெட் தொடர்பான காட்சிகள், படத்தைப் பார்க்கும் ரசிகர்களுக்கு புதுவித அனுபவத்தை தரும் எனப் படக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.
- " class="align-text-top noRightClick twitterSection" data="">
ஜெட்டை அசுர வேகத்தில் இயக்கும்போது, ஆயிரத்து 600 கிலோ பவுண்ட் அளவிலான சக்தி அழுத்தம் தருவதால் முகத்தில் உருக்குலைவு ஏற்படுகிறது. இதில் முகபாவனை காட்டி நடிப்பதென்பது சிரமமான காரியம் என்று டாம் க்ரூஸ் தனது அனுபவத்தை மிரட்சியுடன் பகிர்ந்துள்ளார்.
ஹாலிவுட் பட ரசிகர்கள் மத்தியில் பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கும் இந்தப் படம் 2020ஆம் ஆண்டு ஜூன் மாதம் திரைக்கு வருகிறது.