கடந்த 2019ஆம் ஆண்டு வெளியான 'ஜோக்கர்' திரைப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது. விமர்சன ரீதியாகவும் நல்ல மதிப்புரை இருந்தது. சுமார் ஒரு பில்லியன் வசூல் சாதனையை ஈட்டிய 'ஜோக்கர்' படத்தை தொடர்ந்து அதன் அடுத்த பாகத்தையும் இயக்குநர் எடுப்பாரா என்ற கேள்வி ரசிகர்களிடம் எழாமல் இல்லை.
இதையடுத்து ஒரு விருது வழங்கும் விழாவில் 'ஜோக்கர்' பட நாயகனான ஜோவாகின் பீனிக்ஸ் உடன் இணைந்து பணிபுரிய தான் ஆயத்தமாக உள்ளதாக இயக்குநர் டோட் பிலிப்ஸ் தெரிவித்தார்.
மேலும் "ஒரு படம் 60 மில்லியன் டாலர் செலவில் ஒரு பில்லியன் டாலர் ஈட்டினால் அதன் அடுத்த பாகம் குறித்து யோசிக்கலாம், ஆனால் நானும் ஜோவாகினும் அது குறித்து இன்னும் எதுவும் முடிவு செய்யவில்லை. அவருடன் எந்த படத்திலும் பணிபுரிய எனக்கு விருப்பம் உண்டு" என்று கூறினார்.
ஒரு வேளை 'ஜோக்கர்' படத்தின் அடுத்த பாகத்தை இயக்க முடிந்தால், அந்தப் படத்தை பார்ப்பவர்களுக்கு ஈடுபாட்டை கொடுத்தால்தான் அதை தான் இயக்கமுடியும் எனவும் இயக்குநர் குறிப்பிட்டார்.
இதையும் படிங்க: சூரனின் செகண்ட் லுக் போஸ்டா் ரிலீஸ்