ஜிஎம் ஃபிலிம் கார்ப்பரேஷன் நிறுவனத்தின் சார்பில் சிறிய பட்ஜெட்டில் தயாரான திரௌபதி படம் வசூல் ரீதியாக பெரும் வெற்றி பெற்றது. திரௌபதி படத்தை தொடர்ந்து தற்போது இந்நிறுவனம் தயாரிக்கும் இரண்டாவது படம் "ருத்ர தாண்டவம்". இந்த படத்தை திரௌபதி படத்தை இயக்கிய இயக்குனர் மோகன் G இயக்கி தயாரிப்பிலும் ஈடுபட்டுள்ளார்.
ரிச்சர்ட் ரிஷி கதாநாயகனாக நடிக்கும் இதில், கதாநாயகி மற்றும் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கும் நடிகர் நடிகைகளின் தேர்வு தற்போது நடைபெற்று வருகிறது.
-
உங்கள் வாழ்த்துக்களுக்கு மிக்க நன்றி சார் ❤️🙏🏻 https://t.co/Gg0ke4fMZX
— Mohan G Krish 🔥😎 (@mohandreamer) October 25, 2020 " class="align-text-top noRightClick twitterSection" data="
">உங்கள் வாழ்த்துக்களுக்கு மிக்க நன்றி சார் ❤️🙏🏻 https://t.co/Gg0ke4fMZX
— Mohan G Krish 🔥😎 (@mohandreamer) October 25, 2020உங்கள் வாழ்த்துக்களுக்கு மிக்க நன்றி சார் ❤️🙏🏻 https://t.co/Gg0ke4fMZX
— Mohan G Krish 🔥😎 (@mohandreamer) October 25, 2020
பழைய வண்ணாரப்பேட்டை படத்தின் ஒளிப்பதிவாளர் பரூக் ஒளிப்பதிவு செய்கிறார். இசையமைப்பாளர் ஜூபின் இசை அமைக்கும் இந்தப் படத்தின் படப்பிடிப்பு டிசம்பர் மாத இறுதியில் தொடங்குகிறது. அடுத்த ஆண்டு மே மாதத்தில் படத்தை வெளியிட படக்குழுவினர் திட்டமிட்டுள்ளனர்.