ஷமன் பிக்சர்ஸ் தயாரிப்பில் நடிகர் ஷமன் மித்ரு, நடிகை சத்தியகலா ஆகிய இருவரும் இணைந்து நடித்த படம் 'தொரட்டி'. தற்போது இந்த திரைப்படம் திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கிறது. இந்நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு இந்தப்படத்தின் நாயகி சத்தியகலா திடீரென மாயமானதாக கூறி அப்படத்தின் தயாரிப்பாளர் சென்னை உயர்நீதிமன்றத்தில் ஆட்கொணர்வு மனு ஒன்றை தாக்கல் செய்திருந்தார்.
இந்நிலையில் இந்த மனு நீதிபதி எம்.எம்.சுந்தரேஸ், நிர்மல்குமார் அடங்கிய அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது பொள்ளாச்சி காவல்துறை தரப்பில், 'தொரட்டி' படத்தின் கதாநாயகி சத்தியகலா மாயமாகவில்லை என்றும், அவர் குடும்பத்துடன் பொள்ளாச்சியில் இருப்பதாக தெரிவித்தனர். இந்த விளக்கத்தை ஏற்றுக்கொண்ட நீதிபதிகள் வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்