டாணாக்காரன் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியீடு! - லேட்டஸ்ட் கோலிவுட் செய்திகள்
சென்னை: விக்ரம் பிரபு நடித்துள்ள ’டாணாக்காரன்’ படத்தின் பர்ஸ்ட்லுக் போஸ்டர் வெளியாகி சமூக வலைதளங்களில் நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது.
நடிகர் விக்ரம் பிரபு நடிப்பில் கடைசியாக வெளியான திரைப்படம் ’புலிக்குத்தி பாண்டி’. இதனையடுத்து தற்போது விக்ரம் பிரபுவின் அடுத்த படத்திற்கு ’டாணாக்காரன்’ என்று பெயரிடப்பட்டுள்ளது. தமிழ் இயக்கியுள்ள இப்படத்தை எஸ்.ஆர்.பிரபு தயாரித்துள்ளார்.
இப்படத்தில் விக்ரம் பிரபுவுக்கு ஜோடியாக அஞ்சலி நாயர் நடித்துள்ளார். இந்நிலையில் இப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை படக்குழு தற்போது வெளியிட்டுள்ளது. இதில் சுதந்திரத்திற்கு முந்தைய காலத்திலிருந்த காவலர்கள் போல் உடையணிந்து விக்ரம் பிரபு விரைப்பாக நிற்கிறார்.
இதன்மூலம் அவர் காவலராக இப்படத்தில் நடித்துள்ளார் என்பது தெரியவந்துள்ளது. விரைவில் படம் குறித்த கூடுதல் தகவல்கள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதையும் படிங்க: நடிகர் பிரசாத் படத்தில் இருந்து விலகிய இயக்குநர்!