தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கத்தின் தேர்தல் வருகின்ற நவம்பர் 22ஆம் தேதி நடைபெறவுள்ளது. சென்னை அண்ணாசாலை தயாரிப்பாளர் சங்க கட்டடத்தில் வேட்பு மனு பரிசீலனை தற்போது நடைபெற்று வருகிறது.
இந்நிலையில், தமிழ்த் திரைப்பட தயாரிப்பாளர் சங்கத்தின் நிர்வாகக் குழு, செயற்குழு உறுப்பினர் பதவிகளுக்கு வேட்புமனு தாக்கல் செய்திருந்த வேட்பாளர்களின் வேட்பு மனுக்கள் நீதிபதி ஜெயச்சந்திரன் முன்னிலையில் பரிசீலிக்கப்பட்டு வருகின்றன.
விண்ணப்பங்கள் பரிசீலனை நடைபெற்று வரும் நிலையில் செய்தியாளர்களை சந்தித்த டி. ராஜேந்தர், "தற்போது வரை தங்களது அணி சார்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுக்களில் துணைத் தலைவர்கள் பதவிக்கு முருகன், பி.டி.செல்வக்குமார் ஆகியோரின் மனுக்களும், கௌளரவ செயலாளர் பதவிகளுக்கு மன்னன், சந்திரபோஸ் ஆகியோரின் மனுக்களும், பொருளாளர் பதவிக்கு கே.ராஜன் மனுவும் ஏற்கப்பட்டது.
21 செயற்குழு உறுப்பினர்களின் மனுக்கள் பரிசீலிக்கப்பட்டு வரும் நிலையில் அவற்றின் முடிவுகள் வெளியான பிறகு தங்களது அணியின் பெயரை அறிவிக்கப்படும்" என்றார்.
இதையும் படிங்க: திருமாவளவனை திமுக., காங்கிரஸ் கண்டிக்காதது ஏன்? நடிகை குஷ்பு கேள்வி