சென்னை: தமிழ் சினிமாவில் ஷங்கர், மணிரத்னம் உள்ளிட்ட 10 முன்னணி இயக்குனர்கள் இணைந்து RainOnFilms என்ற புதிய தயாரிப்பு நிறுவனத்தை தொடங்கியுள்ளனர்.
புதிய திரைப்படங்கள் மற்றும் இணைய தொடர்களை தயாரிக்க இவர்கள் திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதன் முதல் படமாக லோகேஷ் கனகராஜ் இயக்கும் படத்தை இவர்கள் இணைந்து தயாரிக்க உள்ளதாக கூறப்படுகிறது.
மேலும், இப்படத்தில் சூர்யா நாயகனாக நடிக்கிறார் என்றும் தகவல் வெளியாகியுள்ளது. லோகேஷ் தற்போது கமலின் விக்ரம் படத்தை இயக்கி வருகிறார். அதனை தொடர்ந்து கைதி இரண்டாம் பாகத்தை இயக்கவுள்ளாராம். அதன்பிறகே சூர்யா படத்தை தொடங்குவார் என கூறப்படுகிறது.
இந்தப் படத்திற்கு ‘இரும்பு கை மாயாவி’ என பெயரிட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. சூர்யா தற்போது ஜெய்பீம், எதற்கும் துணிந்தவன், வாடிவாசல் ஆகிய படங்களில் நடித்து வருகிறார்.
இதையும் படிங்க: வீரப்பன் குடும்பத்தார் வேண்டுகோள்: யோகி பாபு படத்தின் தலைப்பு மாற்றம்!