சென்னை: 'சூரரைப் போற்று' வெற்றியை தொடர்ந்து சூர்யா, பாண்டியராஜ் இயக்கும் 'எதற்கும் துணிந்தவன்', வெற்றிமாறனின் 'வாடிவாசல்', '#சூர்யா 39' போன்ற படங்களில் நடித்து வருகிறார்.
இன்று (ஜூலை.23) தனது பிறந்தநாளை கொண்டாடி வரும் சூர்யாவிற்கு திரைப்பிரபலங்கள், ரசிகர்கள் சமூக வலைதளங்களில் பிறந்தநாள் வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில், சூர்யாவின் 2டி என்டர்டெயின்மென்ட் நிறுவனம் தயாரிக்கும் #சூர்யா 39 படத்தின் டைட்டில், ஃபர்ஸ்ட் லுக் இன்று (ஜூலை.23) மாலை வெளியாகிறது. தற்காலிகமாக '#சூர்யா 39' என பெயர் வைக்கப்பட்டுள்ள இப்படத்தை ஞானவேல் இயக்குகிறார்.
-
Watch out for the FIRST LOOK of #Suriya39 by 5PM today!#Suriya39FirstLook@Suriya_offl @tjgnan @prakashraaj @rajisha_vijayan @rajsekarpandian @srkathiir #Manikandan #LijoMolJose #RameshRao @RSeanRoldan @KKadhirr_artdir @philoedit @anbariv @kabilanchelliah pic.twitter.com/zYUFAPZE7y
— 2D Entertainment (@2D_ENTPVTLTD) July 23, 2021 " class="align-text-top noRightClick twitterSection" data="
">Watch out for the FIRST LOOK of #Suriya39 by 5PM today!#Suriya39FirstLook@Suriya_offl @tjgnan @prakashraaj @rajisha_vijayan @rajsekarpandian @srkathiir #Manikandan #LijoMolJose #RameshRao @RSeanRoldan @KKadhirr_artdir @philoedit @anbariv @kabilanchelliah pic.twitter.com/zYUFAPZE7y
— 2D Entertainment (@2D_ENTPVTLTD) July 23, 2021Watch out for the FIRST LOOK of #Suriya39 by 5PM today!#Suriya39FirstLook@Suriya_offl @tjgnan @prakashraaj @rajisha_vijayan @rajsekarpandian @srkathiir #Manikandan #LijoMolJose #RameshRao @RSeanRoldan @KKadhirr_artdir @philoedit @anbariv @kabilanchelliah pic.twitter.com/zYUFAPZE7y
— 2D Entertainment (@2D_ENTPVTLTD) July 23, 2021
'#சூர்யா 39' படத்தில் ரெஜிஷா விஜயன், பிரகாஷ் ராஜ் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். ஷான் ரோல்டன் இசையமைக்கும் இப்படத்திற்கு தேசிய விருது வென்ற அன்பறிவ் சண்டை காட்சிகளை இயக்கவுள்ளனர்.
இதையும் படிங்க: ரீஎண்ட்ரி கொடுக்கும் ரம்யா பாண்டியன் - சூர்யா தயாரிப்பில் புதிய படம் ஒப்பந்தம்