'பாகுபலி' படத்தின் பிரமாண்ட வெற்றிக்குப் பின், ராஜமெளலி தற்போது ராம் சரண், ஜூனியர் என்டிஆர் நடிப்பில் 'இரத்தம் ரணம் ரெளத்திரம்', '(ஆர்ஆர்ஆர்)' என்னும் படத்தை இயக்கி வருகிறார்.
ஊரடங்கு உத்தரவு காரணமாக தற்போது வீட்டில் இருக்கும் ராஜமெளலி வீட்டில் இருந்துகொண்டே தனியார் தொலைக்காட்சிக்கு நேர்காணல் அளித்தார். அப்போது இந்த வருடத்தின் சிறந்த படம் உள்பட நான்கு ஆஸ்கர் விருது வாங்கிய தென் கொரியன் திரைப்படமான 'பாராசைட்' குறித்து பேச்சு வந்தது.
தனக்கு அந்தப் படம் பிடிக்கவில்லை என்றும்; படம் பார்த்துக்கொண்டிருக்கையில் தான் தூங்கிவிட்டதாகவும், விழித்துப் பார்க்கும் போது ஒருவரை ஒருவர் கொன்று கொண்டிருந்தார்கள். ஒன்றும் புரியவில்லை என்றும் ராஜமெளலி கூறியுள்ளார்.
92 ஆண்டுகால ஆஸ்கர் வரலாற்றில் சிறந்த திரைப்படமாக, அயல் மொழித் திரைப்படம் என்ற விருதை வாங்கிய 'பாராசைட்' குறித்து ராஜமெளலியின் இந்தக் கருத்துக்கு சமூக வலைதளத்தில் நெட்டிசன்கள் பலர் அதிருப்தியைக் கிளப்பியுள்ளனர்.
நெட்டிசன்கள் பலர் ராஜமெளலியின் கருத்தை வைத்து, ட்ரோல் செய்யவும் ஆரம்பித்தனர்.
ராஜமெளலியின் கருத்துக்கு எதிராகவும் ஆதரவாகவும் பலர் பேசிவருகின்றனர். ஒரு படத்தை முழுமையாகப் பார்க்காமல், எப்படி அதைப் பற்றிச் சொல்லலாம் என்றும் விமர்சித்து வருகின்றனர்.