'மாஸ்டர்' திரைப்படத்தைத் தொடர்ந்து நடிகர் விஜய் நெல்சன் டிலிப்குமர் இயக்கும் திரைப்படத்தில் நடித்து வருகிறார். ஜார்ஜியாவில் நடைபெற்று வந்த இப்படத்தின் படப்பிடிப்பு கரோனா வைரஸ் தொற்று காரணமாகத் தற்காலிகமாகத் தள்ளி வைக்கப்பட்டுள்ளது.
இதையடுத்து நடிகர் விஜய்யின் 66வது திரைப்படத்தைத் தெலுங்கு 'மகரிஷி' படத்தை இயக்கிய வம்சி பைடி பல்லி இயக்கவிருப்பதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
மேலும் இரு கதாநாயகிகளைக் கொண்ட கதை என்றும் அதில் ஒரு நாயகியாகக் கீர்த்தி சுரேஷ் நடிக்கவுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
முன்னதாக கீர்த்தி சுரேஷும், விஜய்யும் இணைந்து பைரவா, சர்கார் ஆகிய திரைப்படங்களில் நடித்து உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.