நடிகர் ரஜினிகாந்த் இந்திய திரையுலகில் சூப்பர் ஸ்டாராக வலம் வருபவர். இவருக்கு லதா என்ற மனைவியும் ஐஸ்வர்யா, சவுந்தர்யா என இரண்டு மகள்கள் உள்ளனர்.
இதில் ஐஸ்வர்யா, நடிகர் தனுஷை திருமணம் செய்துகொண்டார். அவருக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர். இரண்டாவது மகள் சவுந்தர்யா கோச்சடையான், வேலையில்லா பட்டதாரி 2 ஆகிய படங்களை இயக்கியுள்ளார். சவுந்தர்யாவுக்கும் தொழிலதிபர் விசாகனுக்கும் கடந்த 2019ஆம் ஆண்டு திருமணம் நடைபெற்றது.
![சவுந்தர்யா குடும்பம்](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/12514066_soundarya.jpg)
இந்நிலையில் தற்போது சவுந்தர்யா கர்ப்பமாக இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும் இந்தத் தகவலை மருத்துவ பரிசோதனைக்காக அமெரிக்கா சென்றுவிட்டு ரஜினி சென்னை திரும்பிய பிறகு தான் சொன்னதாகக் கூறப்படுகிறது. ஏற்கனவே சவுந்தர்யாவுக்கு, வேத் கிருஷ்ணா என்ற மகன் உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: புதுச்சேரியில் 'பொன்னியின் செல்வன்' படப்பிடிப்பு