ஆறு திரைப்படங்கள், ரூ. 1000 கோடிக்கு மேல் வசூல் - கோலிவுட் திருவிழா! - காஞ்சனா 3
தமிழ் திரையுலகுக்கு இந்த ஆண்டு தலைசிறந்த ஆண்டாக அமைந்துள்ளது. ஆறு தமிழ் திரைப்படங்கள் உலக அளவில் ரூ. 1000 கோடிக்கு மேல் வசூல் செய்திருக்கின்றன.

கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் ரஜினி நடித்த ‘பேட்ட’, விஜய் - அட்லி கூட்டணியில் உருவான ‘பிகில்’, அஜித்தின் ‘விஸ்வாசம்’, ‘நேர்கொண்ட பார்வை’, ராகவா லாரன்ஸ் இயக்கி நடித்திருந்த ‘காஞ்சனா 3’, கார்த்தி நடிப்பில் உருவான ‘கைதி’ ஆகிய திரைப்படங்கள் இதுவரையில் ரூ. 1,000 கோடிக்கு மேல் வசூல் செய்துள்ளது.
எந்த ஆண்டும் இல்லாத அளவு தமிழ் சினிமாவுக்கு இந்த ஆண்டு தலைசிறந்த ஆண்டாக அமைந்துள்ளது. இதுவரை கோலிவுட்டில் இப்படி வசூல் மழை பொழிந்தது கிடையாது. பிகில், கைதி ஆகிய திரைப்படங்கள் இன்னும் பல இடங்களில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருப்பது குறிப்பிடத்தக்கது.
Phenomenal year for Kollywood - The Top6 WW grossers (all century+) of the year till date, #Bigil #Petta #Viswasam #Kanchana3 #NerKondaPaarvai and #Kaithi, have together grossed a cumulative 1000 CR+ worldwide..
Conclusion: