ETV Bharat / sitara

தலைவர் 168 படத்தில் இணைந்த சித்தார்த்?

author img

By

Published : Jan 23, 2020, 11:47 AM IST

ரஜினிகாந்த் நடிக்கும் 'தலைவர் 168' படத்தில், நடிகர் சித்தார்த் இணைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

தலைவர் 168 படத்தில் இணைந்த சித்தார்த்?
தலைவர் 168 படத்தில் இணைந்த சித்தார்த்?

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில், பொங்கல் பண்டிகையை முன்னிட்டு வெளியான 'தர்பார்' படம் திரையரங்கத்தில் வெற்றிகரமாக ஓடிக் கொண்டு வருகிறது. தற்போது வரை தர்பார் திரைப்படம், 200 கோடிக்கும் மேல் வசூல் செய்துள்ளதாக சொல்லப்படுகிறது. இருப்பினும் இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்னும் வெளியாகவில்லை.

இதையடுத்து ரஜினிகாந்த் தனது 168ஆவது படத்தில் நடிக்க ஆரம்பித்து விட்டார். 'சிறுத்தை சிவா' இயக்கும் இப்படத்தில் குஷ்பூ, மீனா, சூரி, சதீஷ், கீர்த்தி சுரேஷ் ஆகியோர் நடித்து வருகின்றனர். இன்னும் பெயரிடப்படாத இப்படத்தின் படப்பிடிப்பு ஹைதராபாத்தில் உள்ள, ராமோஜிராவ் ஃபிலிம் சிட்டியில் முடிவடைந்த நிலையில், விரைவில் சென்னையில் அடுத்த கட்ட படப்பிடிப்பு தொடங்கவுள்ளது.

இந்த நிலையில் 'தலைவர் 168'ஆவது படத்தில் நடிகர் சித்தார்த் இணைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இருப்பினும் சித்தார்த், கமல்ஹாசனின் 'இந்தியன் 2' படத்தில் நடித்து வருவதால் இன்னும் 'தலைவர் 168' பட ஒப்பந்தத்தில் கையெழுத்து இடவில்லை என்று சொல்லப்படுகிறது. தற்போது வரை சித்தார்த், ரஜினிகாந்துடன் சேர்ந்து எந்தப் படத்திலும் நடிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: 'பெரியாரியவாதிகள் ஒரு சாதிக்கு தான் எதிரானவர்களாக இருக்கின்றனர்' - கஸ்தூரி ட்வீட்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.