சென்னை: கரோனா பீதியில் அனைவரும் வீட்டுக்குள்ளே முடங்கியிருப்பது குறித்து நடிகர் செந்தில் குமார் ரியல் பிக் பாஸ் தொடங்கியிருப்பதாக கருத்து தெரிவித்துள்ளார்.
கரோனா தொற்றிலிருந்து பாதுகாத்துக் கொள்வதற்காக பலர் வீட்டிலிருந்தே வேலை பார்ப்பது, வெளியில் தேவையில்லாமல் செல்வதைத் தவிர்ப்பது போன்றவற்றை கடைப்பிடித்துவருகின்றனர்.
இதையடுத்து இது குறித்து கருத்து தெரிவித்துள்ள பிரபல தொலைக்காட்சி நடிகரும், பண்பலை தொகுப்பாளருமான மிர்ச்சி செந்தில், "ரியல் பிக் பாஸ் சீசன் தற்போது தொடங்கியுள்ளது. குடும்பத்தினர் அனைவரும் வீட்டிலேயே முடங்கியுள்ளனர்" என்று கருத்து தெரிவித்துள்ளார். இதற்கு அவர் 'கரோனாவின் பின்விளைவுகள்' என்று பெயர் சூட்டியுள்ளார்.
- " class="align-text-top noRightClick twitterSection" data="
">
கரோனா பீதியால் பலரும் தங்களைத் தனிமைப்படுத்திக்கொண்டு-வருகிறார்கள். அந்த வகையில் வெளி உலகிலிருந்து பலரும் தனிமைப்படுத்திக்கொண்டு குடும்பத்தினருடன் ஒன்றாக இருப்பதை இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.
சரவணன் மீனாட்சி தொடர் மூலம் மிகவும் பிரபலமான செந்தில் குமார், 'தவமாய் தவமிருந்து', 'வல்லவனுக்கு புல்லும் ஆயுதம்' உள்ளிட்ட சில திரைப்படங்களிலும் நடித்துள்ளார்.