ETV Bharat / sitara

விஜய் சேதுபதியை மிஞ்சும் சந்தானம்! - Santhanam movies 2020

சந்தானம் நடிக்கும் படங்களைக் குடும்பத்தோடு சென்று பார்த்து ரசிக்கலாம் என்று கோலிவுட் வட்டாரத்தில் பேச்சு உள்ளது. காமெடி கலந்த கதாநாயகனாக நடித்து மக்கள் மனதைக் கவர்ந்த நடிகர் சந்தானத்துக்கு இந்த வருடம் மிக முக்கியமான வருடமாக இருக்கும் என்று அவருக்கு நெருங்கிய வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

Santhanam doing more number of movies this year
Santhanam and Vijay sethupathi
author img

By

Published : Mar 14, 2020, 8:45 PM IST

சென்னை: விஜய் சேதுபதியை மிஞ்சும் அளவுக்கு அதிக படங்களில் நடித்து வருகிறாராம் நடிகர் சந்தானம்.

கோலிவுட்டில் நடிகர் விஜய்சேதுபதிதான் அதிக படங்களில் நடித்துவரும் நடிகராக இருக்கிறார் என்று பேச்சு நிலவுகிறது. ஆனால் அவரது படங்களை விட நடிகர் சந்தானம் நடித்து வரும் படங்கள் அதிகமாக உள்ளதென தெரியவந்துள்ளது. இதனால் அதிக படங்களோடு வியாபாரத்திலும் மற்ற நடிகர்களை விட முன்னலையில் இருக்கிறாராம்.

இந்த ஆண்டைப் பொறுத்தவரை கடந்த ஜனவரி மாதம் சந்தானம் நடித்த டகால்டி படம் வெளியாகி, ரசிகர்களைக் கவர்ந்து வெற்றி பெற்றது. தொடர்ந்து பிஸ்கோத், டிக்கிலோனா, ஓடி ஓடி உழைக்கணும், மன்னவன் வந்தானடி, தில்லுக்கு துட்டு-3 என சந்தானம் நடித்து வரும் அனைத்துப் படங்களும் தயாராகி வருகின்றன.

இந்தப் படங்களைத் தொடர்ந்து ஏ1 படத்தை இயக்கிய ஜான்சன் இயக்கத்தில் ஒரு படத்திலும், ராஜேஷ் எம் இயக்கத்தில் ஒரு படத்திலும், வஞ்சகர் உலகம் படத்தைத் தயாரித்த புரொடக்‌ஷன் கம்பெனி தயாரிக்கும் புதிய படத்திலும் நடிக்க சந்தானம் ஒப்பந்தமாகியுள்ளார்.

நடிப்பு தவிர திரைக்குப் பின்னால் பல்வேறு உதவிகளையும் சத்தமில்லாமல் செய்து வருவதுடன், விஜய் சேதுபதியைப் போல் சினிமா துறையில் சிறந்த மனிதர் என்ற பெயரையையும் எடுத்து வருகிறாராம்.

ஒவ்வொரு ஆண்டும் குறைந்தது மூன்று முதல் நான்கு படங்களில் நடித்து வரும் நடிகராகத் திகழ்கிறார் விஜய் சேதுபதி. இதையடுத்து இவரைப் போல் தற்போது இந்த ஆண்டில் அடுத்தடுத்து வரிசை கட்டி தனது படங்களின் மூலம் நடிகர் சந்தானம் ரசிகர்களை குஷிப்படுத்தவுள்ளாராம்.

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.