ETV Bharat / sitara

அவரவர் சொந்த வழியைத் தொடரப் போகிறோம் - சமந்தா - லேட்டஸ்ட் சினிம செய்திகள்

சமந்தா, நாக சைதன்யா ஜோடி தங்களுடைய திருமண வாழ்க்கை முடிவுக்கு வந்துவிட்டதாக அறிவித்துள்ளது.

சமந்தா
சமந்தா
author img

By

Published : Oct 2, 2021, 4:15 PM IST

தமிழ், தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகைகளில் ஒருவராக வலம்வருபவர் சமந்தா. இவர் 2017ஆம் ஆண்டு தெலுங்கு நடிகரும், நாக அர்ஜுனனின் மகனுமான நாக சைதன்யாவை காதலித்துத் திருமணம் செய்துகொண்டார்.

திருமணத்திற்குப் பின் சமந்தா தனது கணவருடன் ஹைதராபாத்தில் வசித்து படங்களில் கவனம் செலுத்த ஆரம்பித்தார். சமந்தா ரூத் பிரபு என்ற பெயரை மாற்றி நாக சைதன்யாவின் குடும்பப் பெயரான அக்கினேனியைச் சேர்த்து சமந்தா அக்கினேனி என்று பயன்படுத்தத் தொடங்கினார்.

சமந்தா
சமந்தா

ஆனால் சமீபத்தில் தனது பெயருக்குப் பின்னால் இருந்த அக்கினேனி பெயரை நீக்கிவிட்டு வெறும் எஸ் (S) என்று மாற்றியுள்ளார். இதனால் இருவரும் பிரிந்துவிட்டதாக சமூக வலைதளங்களில் செய்திகள் பரவின.

தொடர்ந்து நாக சைதன்யா வீட்டு விழாக்களில் சமந்தா பங்கேற்காததால் இருவரும் விவாகரத்தே பெற்றுவிட்டதாக வதந்தி பரப்பப்பட்டது. இருப்பினும் இருவரும் இது குறித்து எந்த அறிவிப்பும் வெளியிடாமல் இருந்தனர்.

சமந்தா
சமந்தா

இந்நிலையில் சமந்தா, நாக சைதன்யா ஜோடி முதல்முறையாகத் தாங்கள் பிரிந்துவிட்டதாக அறிவித்தனர். இது குறித்து வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பில், "எங்கள் நலம் விரும்பிகள் அனைவருக்கும் ஒரு விஷயத்தைச் சொல்ல விரும்புகிறோம். மிகவும் ஆலோசித்த பிறகு, நானும் சைதன்யாவும் இனி கணவன்-மனைவியாகத் தொடரப் போவதில்லை.

சமந்தா
சமந்தா

பத்தாண்டுகளுக்கும் மேலாக எங்கள் இருவருக்கும் இடையே நட்பு இருந்தது. அதை நாங்கள் பெரும் பொக்கிஷமாகக் பார்க்கிறோம். அந்த நட்புதான் எங்களின் உறவுக்கு அடிப்படை. இனியும் எங்களுக்குள் நட்பு தொடரும்.

இந்தக் கடுமையான சூழ்நிலையில் நண்பர்கள், ஊடகங்கள் எங்களை ஆதரிக்க வேண்டும். எங்களின் தனிநபர் சுதந்திரத்தைக் கருத்தில்கொள்ள வேண்டும். அனைவருக்கும் நன்றி" எனக் குறிப்பிட்டுள்ளர்.

இதையும் படிங்க: வந்தான், சுட்டான், போனான், ரிபீட்- வெளியான மாநாடு ட்ரெய்லர்

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.