திரைப்படம், அரசியல், விளையாட்டு என அன்றாட நிகழ்வுகளை வைத்து சர்ச்சையான ட்வீட்டுகளை பதிவிட்டு ரசிகர்களிடம் வாங்கிக் கட்டிக்கொள்பவர், இயக்குநர் ராம் கோபால் வர்மா. உலகமே கரோனா அச்சத்தில் முடங்கி கிடக்கும் நேரத்தில், இவர் மட்டும் கரோனாவே நினைச்சாலும் என்னை தடுக்க முடியாது என்ற பாணியில் அடுத்தடுத்து படங்களை இயக்கி வெளியிட்டு வருகிறார்.
சமீபத்தில் வெளிநாட்டு நடிகை மியா மல்கோவாவை வைத்து உச்சக்கட்ட கவர்ச்சியில் 'க்ளைமேக்ஸ்' திரைப்படத்தை இயக்கி தனது சொந்த செயலி தளங்களான 'RGV World', SheryasET'யில் வெளியிட்டிருந்தார். அது மட்டுமல்லாது இப்படத்தை வெளியிடுவதற்கு முன்பாக கரோனா வைரஸ் குறித்து உலகில் எடுக்கப்பட்ட முதல் திரைப்படமான 'கரோனா வைரஸ்' படத்தையும் இயக்கியுள்ளார். இப்படமும் விரைவில் வெளியாக உள்ளது.
இதற்கு பின் 'Naked' என்னும் திரைப்படத்தை இந்திய மாடல் ஒருவரை வைத்து அதிக கவர்ச்சி, நிர்வாண காட்சி என படம் முழுவதும் ரசிகர்களை கிறங்கடிக்கும் வகையில் இயக்கியுள்ளார். இந்த படத்தையும் தனது செந்த OTT தளத்திலேயே வெளியிட இருக்கிறார். இதற்கு ஒரு காட்சிக்கு ரூ. 200 வசூலிக்கப்படும் எனக்கூறியுள்ளார்.
க்ளைமேக்ஸ் படத்திற்கு ஒரு காட்சிக்கு ரூ.100 மட்டுமே வசூலித்த இவர், இந்திய பெண்களின் மதிப்பு வெளிநாட்டு பெண்களின் மதிப்பை விட இரண்டு மடங்கு அதிகம் என விலையேற்றத்திற்கான காரணத்தையும் கூறியுள்ளார். இந்தப்படங்களை தொடர்ந்து தற்போது 'Kidnapping Of Katrina Kaif' என்னும் படத்தை இயக்கிவருகிறார். இதன் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை தனது சமூகவலைதளத்தில் வெளியிட்டுள்ளார்.
அதில் அவர் கூறியிருப்பதாவது, "எதிர்காலத்தில் சினிமா தியேட்டர்களே மறந்து விடும். OTT தளத்திலும் சினிமாவின் எதிர்காலம் இருக்காது. ஆனால் நமது சொந்த செயலி (personal app) தான் இருக்கிறது. எனக்கூறியுள்ளார்.
இத்தனைப் படங்களையும் தொடர்ந்து 'The Man Who Killed Gandhi' என்னும் திரைப்படத்தையும் இயக்கி தனது சொந்த செயலிலியில் வெளியிட இருப்பதாகவும் அறிவித்துள்ளார்.