'சில்லுக்கருப்பட்டி' படத்தை இயக்கிய ஹலிதா ஷமீம், நடிகர் சமுத்திரக்கனியை வைத்து இயக்கி, வெளியாகியுள்ள திரைப்படம் ஏலே!. சமுத்திரக்கனி ஐஸ் விற்பனை செய்பவராக நடிக்க, மணிகண்டன், மதுமிதா உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
திரையரங்குகளில் வெளியான ஒரு மாதத்துக்குப் பின்னரே, ஓடிடியில் வெளியிட வேண்டும் என திரையரங்கு உரிமையாளர்கள் தயாரிப்பாளரிடம் கடிதம் கேட்டனர்.
இதனால் கடுப்பான தயாரிப்பாளர் கடந்த வாரம் 'ஏலே' படத்தை நேரடியாக தனியார் தொலைக்காட்சியில் வெளியிட்டார்.
இதனையடுத்து இப்படம் இன்று (மார்ச்.5) நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியாகியுள்ளது.
இதையும் படிங்க : பீஸ்ட் இஸ் பேக்... சந்தையை தெறிக்கவிட்ட ரெட்மி நோட் 10 சீரிஸ்!