கன்னடத் திரையுலகின் வழியே அறிமுகமாகி, தற்போது தென்னிந்தியத் திரையுலகில் முன்னணி நடிகைகளுள் ஒருவராக வலம் வருபவர் நடிகை ராஷ்மிகா மந்தனா. தெலுங்கில் விஜய் தேவரகொண்டாவுடன் ’கீத கோவிந்தம்’ படத்தில் நடித்ததைத் தொடர்ந்து பெரும் பிரபலமடைந்த ரஷ்மிகா, தொடர்ந்து தெலுங்கில் வெற்றிகரமான நாயகியாக வலம் வந்துகொண்டுள்ளார்.
டோலிவுட்டைத் தொடர்ந்து, அடுத்த ஆண்டு ’மிஷன் மஜ்னு’ படத்தின் மூலம் நடிகர் சித்தார்த் மல்ஹோத்ராவுடன் பாலிவுட்டிலும் அறிமுகமாக உள்ள ராஷ்மிகா, தற்போது 'பிக் பி' அமிதாப் பச்சனுடன் புதிய படம் ஒன்றில் நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். தந்தை-மகளுக்கு இடையேயான உறவு குறித்தும், ராஷ்மிகா கதாபாத்திரத்தின் சுய தேடல் குறித்தும் இப்ப்டத்தின் கதை அமைந்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
- " class="align-text-top noRightClick twitterSection" data="
">
கங்கனா நடிப்பில் வெளிவந்த வெற்றிப் படமான குயின் படத்தின் இயக்குநர் விகாஸ் பால் இப்படத்தை இயக்க உள்ளதாகவும், இப்படத்திற்கு ’டெட்லி’ (Deadly) எனப் பெயரிடப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், மார்ச் 2021இல் இப்படத்தின் படப்பிடிப்பு தொடங்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஏக்தா கபூர், ரிலையன்ஸ் எண்டர்டயின்மெண்ட் இணைந்து இப்படத்தைத் தயாரிக்க உள்ளனர்.
’மிஷன் மஜ்னு’ தவிர தற்போது புஷ்பா, ஆடாலூ மீகு ஜோஹார்லு ஆகிய தெலுங்கு, கன்னட மொழிப் படங்களிலும் ராஷ்மிகா நடித்து வருவது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க : விஜய்யின் 'மாஸ்டர்' ரிலீஸ் தேதி உறுதி!