கன்னட மொழியில் அறிமுகமான ராஷ்மிகா, தெலுங்கில் வெளியான, ‘கீதா கோவிந்தம்’ படம் மூலம் பிரபலமானார். இதனையடுத்து தமிழில் இவர் நடித்துள்ள, ‘சுல்தான்’ படம் சமீபத்தில் வெளியானது.
இந்நிலையில் ஊரடங்கு நேரத்தில் வீட்டில் இருக்கும் ராஷ்மிகா தனது அன்றாடப் பணி குறித்து தனது சமூக வலைதளங்களில் வெளியிட்டுவருகிறார். அந்தவகையில் ராஷ்மிகா தனது செல்ல நாயை ரசிகர்களுக்கு அறிமுகம் செய்துவைத்துள்ளார்.
இது குறித்து அவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், “உலகில் நடக்கும் பிரச்சினைகளுக்கு இடையே நான் என்னுடைய சந்தோஷத்தைக் கண்டு பிடித்துவிட்டேன்.
நான் தற்போது நலமாக ஆராவ்தான் காரணம். 3 நொடியில் காதலில் விழ முடியும் என்பார்கள். ஆனால் வெறும் 0.3 மில்லி நொடியில் அவனை நான் பார்த்ததும் என் மனம் உருகிவிட்டது” எனக் குறிப்பிட்டுள்ளார்.