கொலையுதிர் காலம் படத்தின் செய்தியாளர்கள் சந்திப்பில் அப்படத்தின் கதாநாயகி நயன்தாரா குறித்து நடிகர் ராதாரவி பேசிய பேச்சு சர்ச்சையை கிளப்பியுள்ளது. இதற்கு திரை நட்சத்திரங்கள், ராதாரவிக்கு எதிராக கண்டன குரல்களை எழுப்பி வருகின்றனர்.
சினிமா பிரபலங்கள் மட்டுமின்றி அரசியல் தலைவர்களும் தங்களது கண்டனங்களை தெரிவித்து வருகின்றனர். திமுக தலைவர் மு.க ஸ்டாலினும், கட்சியில் இருந்து ராதாரவியை தற்காலிகமாக நீக்கியுள்ளார். இந்த விவகாரம் தொடர்பாக, நயன்தாரா தரப்பில் இருந்து அறிக்கை ஒன்றும் சமீபத்தில் வெளியானது.
இந்நிலையில் ராதாரவியின் இக்கருத்திற்கு தெலுங்கின் முன்னணி நடிகரும் பாகுபலி பட வில்லனுமான ராணா டகுபதி டுவிட்டரில் தனது கண்டனத்தை பதிவிட்டுள்ளார். அதில், ஒரு மிகச்சிறந்த நடிகையை பற்றி ராதாரவி அருவருப்பான கருத்துகள் கூறியதைக் கேட்டேன். உங்கள் கருத்துகள் உங்கள் அருவருப்பான குணத்தை காட்டுகிறது. பல கதாபாத்திரங்கள் சிறப்பாக நடித்த அவரது திறனைக் காட்டுகிறது. இந்த சமூகத்துக்கு அவமானம் நீங்கள் என்று கடுமையாக குறிப்பிட்டுள்ளார்.